டெல்லியில் இன்று அதிகாலை திடீரென்று இடிமின்னலுடன் அதிகனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளதால் டெல்லி முழுவதும் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் முதல் முனைத்தின் முகப்பு கூரை இடிந்து விழுந்தது. அப்போது அதன் அடியில் இருந்த கார்கள் இடிபாடுகளில் சிக்கி நொறுங்கியது. அதேபோல் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அவசர அவசரமாக மேற்கூறை திறக்கப்பட்டடதே இந்த விபத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில், நடந்த 8 கட்டுமான பிழைகள் என ஒரு நீண்ட பட்டியலை சமூகவலைதளத்தில் வெளிளியிட்டுள்ளார்.
அதில், டெல்லி விமான நிலைய டெர்மினல் 1-ன் முகப்பு கூரை இடிந்து விழுந்தது.
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் விமான நிலைய கூரை இடிந்து விழுந்தது.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியாவில் திறக்கப்பட்ட புதிய சாலைகளில் திடீர் பள்ளங்கள்.
ராமர் கோவில் கூரையின் வழி நீர் ஒழுகல். புதிதாக திறக்கப்பட்ட மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு சாலையில் விரிசல்.
பீகாரில் 2023, 2024 ஆண்டுகளில் திறக்கப்பட்ட, 13 புதிய பாலங்கள் இடிந்து விழுந்தது.பிரகதி மைதான் சுரங்கம், நீரில் மூழ்கடிப்பு.
குஜராத் மோர்மி பாலம் இடிந்து விழுந்தது” என தெரிவித்துள்ளார்.