இந்தியா

78 ஆண்டுகளில் முதல்முறை சபாநாயகர் தேர்தல் - விறுவிறுப்பாகும் இந்திய அரசியல் களம்!

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல்முறை சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ளது அனைவர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

78 ஆண்டுகளில் முதல்முறை சபாநாயகர் தேர்தல் - விறுவிறுப்பாகும் இந்திய அரசியல் களம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 293 இடங்களையும் பிடித்துள்ளது. பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

பாஜக ஆட்சியை பிடித்தாலும் அதன் முக்கிய கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 2 கட்சிகளும் பாஜகவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. முக்கிய துறைகள், சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியானது. இந்த சூழலில் மோடியின் அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 5 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

78 ஆண்டுகளில் முதல்முறை சபாநாயகர் தேர்தல் - விறுவிறுப்பாகும் இந்திய அரசியல் களம்!

இருப்பினும் பாஜகவே சபாநாயகர் பதவியை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவந்த நிலையில், மீண்டும் சபாநாயகராக பாஜகவை சேர்ந்த ஓம் பிர்லாவை முன்மொழிந்துள்ளது. இதனிடையே பாஜகவை தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் சபாநாயகர் பதவியை கொடுத்தால் தங்கள் ஆதரவு இருப்பதாக எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியது.

குறிப்பாக தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவர் யாரேனும் பதவி வகித்தால், தங்கள் முழு ஆதரவை கொடுப்பதாக இந்தியா கூட்டணி அறிவித்தது. எனினும் பாஜகவை சேர்ந்த ஓம் பிர்லாவையே மீண்டும் பாஜக சபாநாயகராக முன்மொழிந்துள்ளது. இந்த நிகழ்வுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்காலிக சபாநாயகர் பிரச்னை உருவானது.

பர்த்ருகரி மஹ்தாப், கொடிக்குன்னில் சுரேஷ்
பர்த்ருகரி மஹ்தாப், கொடிக்குன்னில் சுரேஷ்

18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பிக்கள் பதவி பிரமாணம் செய்வதற்காக சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தற்காலிகமாக நியமிக்கப்படுவர். அவ்வாறு தற்காலிக சபாநாயகராக பாஜகவை சேர்ந்த பர்த்ருகரி மஹ்தாப் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை விட அனுபவத்தில் மூத்தவரான மக்களவைக்கு 8 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷை பாஜக புறக்கணித்துள்ளது.

ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்தில் யார் அனுபவத்தில் மூத்தவரோ அவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் பாஜக திட்டமிட்டே அவரை புறக்கணித்தது. இதையடுத்து அவர் ஒரு தலித் சமூகம் என்பதால் வேண்டுமென்றே பாஜக புறக்கணித்ததா என்று எதிர்க்கட்சியினர் கேள்விகள் எழுப்பியதோடு, எதிர்க்கட்சி எம்.பி-களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக துணை சபாநாயகர் பொறுப்பையும் புறக்கணித்தனர்.

ஓம் பிர்லா, கொடிக்குன்னில் சுரேஷ்
ஓம் பிர்லா, கொடிக்குன்னில் சுரேஷ்

இந்த விவகாரமே இன்னும் முடியாத நிலையில், சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவை எதிர்த்து இந்தியா கூட்டணி நேரடியாக போட்டியிட தயாராகியுள்ளது. அதன்படி ஓம் பிர்லாவை எதிர்த்து தற்காலிக சபாநாயகர் பதவி வழங்கப்படாமல் யாரை பாஜக நிராகரித்ததோ, அந்த கொடிக்குன்னில் சுரேஷ் களம் காணவுள்ளார்.

தற்போது 18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வயநாடு தொகுதி காலியாக இருப்பதால் மீதமிருக்கும் 542 எம்.பி-க்களும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இந்த சூழலில் சபாநாயகர் தேர்தல் நாளை (ஜூன் 26) நடைபெறுகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, சுமார் 78 ஆண்டுகாலத்தில் முதல்முறையாக சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories