இந்தியா

ஒரே கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் : தொடர்ந்து வெளிவரும் நீட் தேர்வின் குழப்பங்கள் !

நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தால் மாணவர்கள் குழப்பம் அடைந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒரே கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் : தொடர்ந்து வெளிவரும் நீட் தேர்வின் குழப்பங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கூட பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஒரே கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் : தொடர்ந்து வெளிவரும் நீட் தேர்வின் குழப்பங்கள் !

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நீட் முறைகேடு குறித்து ஆதாரபூர்வமாக ஏராளமான புகார்கள் வெளிவந்தன. இந்த நிலையில், நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தால் மாணவர்கள் குழப்பம் அடைந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தால் எதனை தேர்வு செய்வது என்று மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

இந்த கேள்விக்கு பதில் அளித்தால் ஒருவேளை நெகட்டிவ் மார்க் கிடைத்துவிடும் என்று கருதி அந்த கேள்விக்கு விடையளிக்காமல் பலரும் அதனை தவிர்ந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட கேள்விக்கு இரண்டு விடைகளும் எழுதியவர்களுக்கும், அந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல் விட்டவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கி மறுதேர்வு முடிவு பட்டியல் வெளியிட வேண்டுமென்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories