இந்தியா

குவைத் விபத்து : கேரளாவுக்கு கொண்டு வரப்பட்ட இந்தியர்களின் உடல் - சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு!

குவைத் விபத்து : கேரளாவுக்கு கொண்டு வரப்பட்ட இந்தியர்களின் உடல் - சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மங்கஃப் என்ற நகரில் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 12-ம் தேதி காலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் தமிழர்கள், கேரளாவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 200 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து தீயானது சில மணித்துளிகளிலேயே மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவிய நிலையில், அதில் சிக்கிய தொழிலாளர்கள் தப்பிக்க முயன்றபோது அதில் சிலர் தீயில் கருகி பலியானர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் ஆவர். அதில் கேரளாவை சேர்ந்தவர்கள் 23 பேர், தமிழ்நாட்டை சேர்ந்தவர்க 7 பேர், கர்நாடகாவை சேர்ந்தவர் ஒருவர் ஆவர்.

குவைத் விபத்து : கேரளாவுக்கு கொண்டு வரப்பட்ட இந்தியர்களின் உடல் - சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு!

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் இந்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் தீவிரமாக செயல்பட்ட நிலையில், விமானப்படைக்கு சொந்தமான விமானம் நேற்று குவைத் புறப்பட்டு சென்றது. இந்த சூழலில் மானப்படைக்கு சொந்தமான சி 130 என்ற விமானம் உயிரிழந்த 45 பேரின் உடல்களும் இன்று காலை கேரளாவின் கொச்சிக்கு வந்தடைந்தது.

குவைத் விபத்து : கேரளாவுக்கு கொண்டு வரப்பட்ட இந்தியர்களின் உடல் - சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு!

தொடர்ந்து கொச்சியில் அவர்கள் அனைவரின் உடலும் வைக்கப்பட்ட நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் தமிழ்நாடு சார்பாக வெளிநாட்டுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கொச்சிக்கு சென்று அனைவரின் உடலுக்கும் இறுதி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து அவர்களது உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டதோடு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் தீக்காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories