இந்தியா

தேர்தல் முடிந்த 2 நாளில் சுங்கச்சாவடி கட்டணம், பால் விலை உயர்வு : அடங்காத ஒன்றிய பா.ஜ.க அரசு!

தேர்தல் முடிந்த கையோடு பால் விலை, சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தேர்தல் முடிந்த 2 நாளில் சுங்கச்சாவடி கட்டணம், பால் விலை உயர்வு : அடங்காத ஒன்றிய பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அடுத்த 5 ஆண்டுகள் ஒன்றியத்தில் யார் ஆட்சி என்பது நாளை தெரிந்து விடும்.

இந்த மக்களவை தேர்தல் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் மிகவும் முக்கியத்துவம் வாழ்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தலில் களம் கண்டுள்ளது. இதனால்தான் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியின் மக்கள் விரோத திட்டங்களால் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரம் வீழ்ச்சி காரணமாக என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கூட மக்களவை தேர்தல் முடிந்த கையோடு சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் அமல் பால் விலை உயர்வு மக்களை வேதனையடைய செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளிலும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது.

அதேபோல், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் கீழ் செயல்படும் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமுல் கோல்டு பால் ஒரு லிட்டர் ரூ64 ல் இருந்து ரூ66 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அமுல் சக்தி, அமுல் டீ ஸ்பெஷல் என அனைத்து அமுல் பால் வகைகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இப்படி வாக்குப்பதிவு முடிந்த 2 நாளிலேயே சுங்கக்கட்டணம் மற்றும் பால் விலை உயர்ந்துள்ளது மக்களை வேதனையடைய வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories