இந்தியா

”2 மாதங்களுக்கு முன்பு வீட்டிலேயே தயாரிக்கப்படும் EXIT POLLS முடிவுகள்” : மம்தா பானர்ஜி!

2 மாதங்களுக்கு முன்பே வீட்டில் கருத்துக் கணிப்பு முடிவுகள் தயாரிக்கப்படுகின்ற என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

”2 மாதங்களுக்கு முன்பு வீட்டிலேயே தயாரிக்கப்படும் EXIT POLLS முடிவுகள்”  : மம்தா பானர்ஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 1 நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு ஆதரவாகவே வெளியாகியுள்ளது.

குறிப்பாக பாஜக கூட்டணி 350 முதல் 371 இடங்களுக்கும் மேல் வெற்றி பெரும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியானது. மேலும் நாடு முழுவதும் பாஜகவே பெரும்பான்மை பெரும் என்றும், பாஜக ஆளாத முக்கிய மாநிலங்களில் கூட பாஜக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதில் NewsX, NDTV, India News ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 371, இந்தியா கூட்டணி 125, பிற 47 என்று ஒரே மாதிரியான முடிவுகள் வெளியானது. இதனால் பாஜகவைக் கொடுத்ததை இந்த நிறுவனங்கள் அப்படியே வெளியிட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பே வீட்டில் கருத்துக் கணிப்பு முடிவுகள் தயாரிக்கப்படுகின்ற என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய மம்தா பானர்ஜி, " தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை 2016,2019,2021 தேர்தல்களிலேயே நாங்கள் பார்த்து விட்டோம். எந்த கணிப்பும் சரியாகச் சொன்னது இல்லை.

2 மாதங்களுக்கு முன்பாகவே வீட்டிலிருந்தே கருத்துக் கணிப்பு முடிவுகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. தேர்தல் களத்தில் பிளவுவாத கருத்துக்களைப் பேசிய பா.ஜ.கவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories