இந்தியா

”பிரதமர் பதவியின் கண்ணியத்தை சிதைத்து விட்ட மோடி” : பிரியங்கா காந்தி விமர்சனம்!

பிரதமர் பதவியின் கண்ணியத்தை மோடி சிதைத்து விட்டதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

”பிரதமர் பதவியின் கண்ணியத்தை சிதைத்து விட்ட மோடி” : பிரியங்கா காந்தி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா கூட்டணி வேட்பாளர் மணீஷ் திவாரியை ஆதரித்து சண்டிகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு சிறப்புரையற்றினார்.

அப்போது பேசிய பிரியங்கா காந்தி, " இந்துக்களுக்கு எதிரானது காங்கிரஸ் என்று பா.ஜ.கவினர் குற்றம்சாட்டுகிறார்கள். உண்மை, அன்பு, நல்லிணக்கம், அகிம்சையை போதிக்கக்கூடியது காங்கிரஸ் கட்சியின் தத்துவம்.

மக்களின் மத உணர்வுகளை பயன்படுத்தி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார். "இந்து - முஸ்லிம் விஷயங்களைப் பற்றிப் நான் பேசவில்லை. அப்படி பேசி இருந்தால் பிரதமராக இருக்க தகுதியில்லை" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமராக இருக்க தகுதியற்றவர் என்பதை மோடியே ஒப்புக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு தேர்தலிலும் மத உணர்வுகளை பற்றி மட்டுமே பேசியுள்ளார். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஒருபோதும் அவர் பேசியது இல்லை. பிரதமர் பதவியின் கண்ணியத்தையே மோடி குறைத்து விட்டார். எந்த ஒரு பிரதமரும் மோடி பேசுவதுபோல் பேசியது கிடையாது.

45 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கத்தால் மக்களின் வாழ்க்கை கடினமாகியுள்ளது. இதுபற்றி எல்லாம் பிரதமர் மோடிக்கு கவலையில்லை. மக்கள் வாழ்க்கையிலும், நாட்டிலும் மாற்றத்தை கொண்டு வர நினைக்கும் இந்தியா கூட்டணியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories