உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ராவத்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வீடிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென இளைஞர் ஒருவர் சிறுமியிடம் தகாதமுறையில் நடந்து கொண்டுள்ளார்.
பிறகு அங்கு பொதுமக்கள் வருவதை கண்ட அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை தொடர்ந்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் உள்ள மதுக்கடையில் இருந்த இளைஞர் ஒருவர்தான் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிசிடிவி காட்சியில் உள்ள அடையாளத்தை வைத்து போலிஸார் அந்த இளைஞரை தேடி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாகவே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவி வருகிறது. நாட்டிலேயே இந்த மாநிலத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகம் நடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கவலையில்லை. மத்தை வைத்து எப்படி அரசியல் செய்பது என்பதில் தான் அவரது முழு கவனமும் இருக்கிறது என மாதர்சங்கங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் விமர்சித்துள்ளனர்.