மேற்குவங்கத்தில் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியருக்கு ஆளுநர் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், புர்பா பர்தமான் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநர் மாளிகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்காக தன்னுடைய இதயம் கண்ணீர் சிந்துவதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சாட்சியைப் பார்த்தபோது அப்பெண்ணின் கண்ணீர் தன்னுடைய இதயத்தை உடைத்தது என்றும் அவர் கூறினார்.
ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு, ஆளுநர் பாலியல் தொல்லை அளித்தது குறித்து பாஜகவினர் பதிலளிக்க வேண்டும் என கூறிய மம்தா பானர்ஜி, ராஜ்பவனுக்குச் சென்ற பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து ஏன் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.