இந்தியா

தேர்தல் அறிக்கையில் பாஜகவை வீழ்த்த வியூகம்: திமுக கோரிக்கைகளை ஏற்ற காங்கிரஸ்; வலுப்பெறும் இந்தியா கூட்டணி

திமுக கோரிக்கைகளை ஏற்றது காங்கிரஸ்!

தேர்தல் அறிக்கையில் பாஜகவை வீழ்த்த வியூகம்: திமுக கோரிக்கைகளை ஏற்ற காங்கிரஸ்; வலுப்பெறும் இந்தியா கூட்டணி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி, ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக இந்த தேர்தலில் களம் காணுகிறது.

கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜக அரசின் மீது எதிர்ப்பலைகள் எழுந்துள்ளது. இதனால் தோல்வி பயத்தில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு, இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ வைத்து எதிர்க்கட்சிகளை முடக்கும் பாஜக அரசின் வியூகம் தோல்வியை அடைந்துள்ளது என்பது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு மூலம் தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது. மேலும் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பலர், வேட்பாளர் போட்டியில் இருந்து விலகி வருகின்றனர். மேலும் சில வேட்பாளர்கள் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, இந்தியா கூட்டணி பக்கம் நகர்ந்துள்ளனர்.

தேர்தல் அறிக்கையில் பாஜகவை வீழ்த்த வியூகம்: திமுக கோரிக்கைகளை ஏற்ற காங்கிரஸ்; வலுப்பெறும் இந்தியா கூட்டணி

இதற்கிடையில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் உள்ள இந்தியா கூட்டணி கடந்த மாதம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் முக்கிய அறிவிப்பாக, பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, கச்சத்தீவு மீட்பது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இந்தியா கூட்டணிக்கு பெரும் பலத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில், 

ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.

நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை. மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம்.

2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூகத்தினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

தேர்தல் அறிக்கையில் பாஜகவை வீழ்த்த வியூகம்: திமுக கோரிக்கைகளை ஏற்ற காங்கிரஸ்; வலுப்பெறும் இந்தியா கூட்டணி

மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் வேலை வாய்ப்புகளை நிரப்புவோம்

நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும்.

அங்கன்வாடி ஊழியர்கள் இரட்டிப்பாக்கப்படும். அங்கன்வாடியில் கூடுதலாக 14 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்

மனித கழிவுகளை மனிதரே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும்.

2025 முதல் மத்திய அரசு பணிகளில் 50% பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்

ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.

ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.

பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும்!.

தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தனி சட்டம்.

தனிநபர் சட்டங்களில் வரும் மாற்றம், அனைத்து சமுதாயத்தினரின் சம்மதம் பெற்ற பிறகே மேற்கொள்ளப்படும்.

அரசு தேர்வுகள் விண்ணப்பக் கட்டணத்தை காங்கிரஸ் ரத்து செய்யும்.

முதியவர்கள், விதவைப் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் பென்ஷன் ரூ.1000 உயர்த்தப்படும்.

21 வயதுக்கு கீழே உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைகளை களையும் வகையில் மறு ஆய்வு செய்யப்படும்.

அனைத்து மொழிகளிலும் பிரெய்லி மற்றும் சமிக்ஞை அங்கீகரிக்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.

டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு பொதுத் துறையில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும்.

தேர்தல் அறிக்கையில் பாஜகவை வீழ்த்த வியூகம்: திமுக கோரிக்கைகளை ஏற்ற காங்கிரஸ்; வலுப்பெறும் இந்தியா கூட்டணி

பழகுநர் பயிற்சி மேற்கொள்ள இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் தொகை வழங்கப்படும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். காஷ்மீருக்கும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும். உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.7.5 லட்சம் வரை வழங்கப்படும்.

மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக்கடன்களும் ரத்து செய்யப்படும் . பாஜக கொண்டுவந்த ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு வணிகர்களுக்கு ஏற்ற புதிய ஜி.எஸ்.டி. (2.0) கொண்டுவரப்படும்.

மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியம் ரூ.400-ஆக உயர்த்தப்படும். நகர்ப்புறங்களிலும் வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படும்.

ரூ.25 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையை மாநில |அரசுகளுடன் ஆலோசித்து திருத்தி அமைக்கப்படும்.

அனைத்து கடலோர பகுதிகளிலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

முப்படை வீரர்களை தேர்வு செய்யும் அக்னி பாத் திட்டம் ரத்து செய்யப்படும். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவினால் தானே பதவி இழக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

வாக்களிக்கும்போது வாக்காளர் ஒப்புகைச் சீட்டை பார்த்த பிறகு பெட்டியில் போடும் நடைமுறை அமல்படுத்தப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படாது .

அனைத்து விசாரணை அமைப்புகளும் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து மக்கள் விரோத சட்டங்களிலும் திருத்தம் செய்யப்படும்.

நிதி ஆயோக் திட்டக்குழு மீண்டும் கொண்டு வரப்படும். பண மதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

பா.ஜ.க. ஆட்சியில் வெளிநாடுகளுக்கு குற்றவாளிகள் தப்பிச்சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும். பா.ஜ.க.வுக்கு மாறியதால் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.

தேர்தல் பத்திர முறைகேடு, பி.எம். கேர்ஸ், ராணுவ ஒப்பந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும்.

பால்புதுமையினர் (LGBTQIA+) நல சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கான சட்டம் இயற்றப்படும். LGBT சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்.

தேர்தல் அறிக்கையில் பாஜகவை வீழ்த்த வியூகம்: திமுக கோரிக்கைகளை ஏற்ற காங்கிரஸ்; வலுப்பெறும் இந்தியா கூட்டணி

பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும்.

செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

10 ஆண்டுகளில் எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்களை ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யப்படும்.

மீனவர்களுக்காக கூட்டுறவு வங்கிகள் அமைக்கப்படும், மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்.தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையாக இருக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்.வேளாண் இடு பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது.

குறிப்பாக, நீட், ஜி.எஸ்.டி மற்றும் புதிய கல்விக் கொள்கையில் மாநில அரசின் முடிவுக்கு முன்னுரிமை, ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறை கொண்டு வரப்பட மாட்டாது, நூறு நாள் வேலைக்கான தினசரி ஊதியம் ரூ.400, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான தனிச்சலுகை, இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பு 50% மேல் அதிகரிப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, அக்னிபாத் திட்ட ஒழிப்பு, மீண்டும் திட்டக் கமிஷன், தொழிலாளர் விரோத சட்டங்கள் கைவிடப்படும் போன்ற திமுகவின் வாக்குறுதிகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories