இந்தியா

பீகாரில் NDA கூட்டணியில் வாரிசுகளுக்கு சீட் : நீங்க வாரிசு அரசியல் பத்தி பேசலாமா மோடி?

நாடு முழுவதும் 25% வாரிசுகளுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பீகாரில் NDA கூட்டணியில் வாரிசுகளுக்கு சீட் : நீங்க வாரிசு அரசியல் பத்தி பேசலாமா மோடி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போது எல்லாம், எழுதிக் கொடுத்த ஒரு வசனத்தை ஒப்பித்து விட்டுச் செல்லாமல் இருக்கமாட்டார். 'தமிழ்நாட்டில் நடப்பது குடும்ப ஆட்சி' என்பதுதான் அந்த வசனம். இதைக் கேட்டுக் கேட்டு தமிழ்நாட்டு மக்களே வெறுத்துவிட்டார்கள்.

தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட பிரதமர் மோடிக்குப் பல முறை பதிலடி கொடுத்துள்ளார். இருந்தபோதும் புளித்த மாவிலேயே பிரதமர் மோடி குடும்ப அரசியல் என்ற தோசையை தற்போது வரை ஊற்றி வருகிறார்.

சரி இவர் இருக்கும் கட்சியான பா.ஜ.கவில் அப்படி குடும்ப அரசியலே இல்லையா? என்று பார்த்தால் அதுவும், மற்ற கட்சிகளைக் காட்டிலும் இங்குதான் குடும்ப அரசியல் அதிகம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட தங்களது வரிசுகளைதான் பா.ஜ.கவின் தலைவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளனர்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட வாரிசுகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: -

• ஜமுய் -அருண் பார்தி, (சிராக் பாஸ்வானின் மைத்துனர்)

• ஹாஜிபூர் - சிராக் பாஸ்வான். (ராம்விலாஸ் பாஸ்வானின் மகன்)

• சமஸ்திபூர் - சாம்பவி சௌத்ரி. (அமைச்சர் அசோக் சவுத்ரியின் மகள்)

• வால்மீகிநகர் - சுனில் குமார் (முன்னாள் அமைச்சர் வைத்தியநாத் மஹதோவின் மகன்)

• மேற்கு சம்பாரண் - சஞ்சய் ஜெய்ஸ்வால், முன்னாள் எம்பி மதன் ஜெய்ஸ்வாலின் மகன்

• ஷியோஹர் - லவ்லி ஆனந்த் (முன்னாள் எம்பி ஆனந்த் மோகனின் மனைவி)

• மதுபானி - அசோக் யாதவ், (முன்னாள் அமைச்சர் ஹுகும்தேவ் நாராயண் யாதவின் மகன்)

• வைஷாலி - வீணாதேவி, (எம்எல்சி தினேஷ் சிங்கின் மனைவி)

• சிவன் .- விஜய் லட்சுமி குஷ்வாஹா, (முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் குஷ்வாஹாவின் மனைவி)

• அவுரங்காபாத் - சுஷில் குமார் சிங் - ( முன்னாள் எம்பி ராம் நரேஷ் சிங்கின் மகன் )

• நவாடா - விவேக் தாக்கூர் - ( முன்னாள் அமைச்சர் டாக்டர் சிபி தாக்கூரின் மகன்)

நாடு முழுவதும் 25% வாரிசுகளுக்குதேசிய ஜனநாயகக் கூட்டணியால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories