இந்தியா

'ஐயோ பாவம் பணம் இல்லையாம்' : மக்களை கண்டு பயந்து ஓடும் நிர்மலா சீதாராமம்!

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

'ஐயோ பாவம் பணம் இல்லையாம்' : மக்களை கண்டு பயந்து ஓடும் நிர்மலா சீதாராமம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு அல்லது கர்நாடகா, ஆந்திராவில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயரை பா.ஜ.க வெளியிடவில்லை.

இந்நிலையில் தேர்தலில் நான் போட்டியிடாதது ஏன் என நிர்மலா சீதாராமன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "தமிழ்நாடு அல்லது ஆந்திராவில் தன்னை போட்டியிட பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா விருப்பம் தெரிவித்தார். பின்னர் இது குறித்து 10 நாட்கள் யோசித்து பார்த்தேன். இதையடுத்து தேர்தலில் போட்டியிடவில்லை என்று கட்சி தலைமையிடம் அறிவித்தேன். தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை" என தெரிவித்துள்ளார்.

இவர் இதுவரை மக்களை நேரடியாக களத்தில் சந்தித்து வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குச் சென்றது கிடையாது. மாநிலங்களை உறுப்பினராகவே நாடாளுமன்றத்துக்குச் சென்றவர் நிர்மலா சீதாராமன். மாநிலங்களவை உறுப்பினராக இருந்து கொண்டுதான் பா.ஜ.க ஆட்சியில் இரண்டு முறை அமைச்சராக இருந்துள்ளார். தற்போது இவரது மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவி காலம் 2028 ஆம் ஆண்டோடு நிறைவடைகிறது.

மக்களை நேரடியாக சந்திக்க நிர்மலா சீதாராமனுக்கு என்ன அவ்வளவு பயமா?. பணம் இல்லை என்று சொல்வது எல்லாம் பா.ஜ.கவினர் உருட்டும் மூட்டையில் இருந்து ஒரு உருட்டை எடுத்துக் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சைச் சாமானியன் கூட நம்பமாட்டான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories