பா.ஜ.க மூத்த தலைவரும் கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா மீது மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் வீட்டிற்குக் கடந்த மாதம் கல்வி உதவி கேட்டு சிறுமி ஒருவர் தனது தாயாருடன் வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் எடியூரப்பா தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எடியூரப்பா மறுப்பு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சிறுமியும், அவரது சிறுமியின் தாயாரும் கண்ணீருடன் இங்கு வந்தனர். அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டேன்.
பின்னர் அவர்களுக்கு உதவும் படி போலிஸ் ஆணையர் தயாணந்துக்கு போன் செய்து கூறினேன். அப்போது அவர்கள் கஷ்டம் என கூறியதால் பணம் கொடுத்து அனுப்பிவைத்தேன். இந்த விவகாரம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.