புதுச்சேரி மாநிலத்தில் ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக சைபர் கிரைம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து மோசக்காரர்களிடம் இருந்து பணத்தை மீட்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான காசோலையை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோரிமேடு பகுதியில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு பூமியான்பேட்டையை சேர்ந்து முருகன் என்பவருக்கு ரூ. 52 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதேபோல் பொது இடங்களில் தவற விட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான 70 செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும் புதுச்சேரியில் கடந்த 22-நாட்களில் மட்டும் ஆன்லைன் மூலம் 5 கோடி அளவில் பணத்தை இழந்ததாக 255 புகார்கள் பெறப்பட்டுள்ளது. எனவே இணையவழி மூலம் வரும் விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் போலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.