இந்தியா

”திமிர்பிடித்த பா.ஜ.க அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி” : பில்கிஸ் பானு வழக்கு - ராகுல் காந்தி வரவேற்பு!

திமிர்பிடித்த பா.ஜ.க அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி என பில்கிஸ் பானு வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் காந்தி வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

”திமிர்பிடித்த பா.ஜ.க அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி” : பில்கிஸ் பானு வழக்கு - ராகுல் காந்தி வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும் அவரது குடும்பத்தாரையும், அவரது 2 வயது மகன்களையும் கொடூரமாக கொன்றது.

இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இதில் தொடர்புடைய 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்ததது.

பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்தது. ஆனால் விடுதலையான குற்றவாளிகளை இனிப்புகள் கொடுத்து பாஜகவை சேர்ந்தவர்களும், இந்துத்வ கும்பலும் வரவேற்றனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு கண்கலங்கி பேட்டி ஒன்றையும் அளித்தார்.

தொடர்ந்து 11 பேரின் விடுதலையை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் மனுதாக்கல் செய்தார். அப்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "இன்று பில்கிஸ் பானு, நாளை யார்? அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். என்ன அடிப்படையில் அவர்களை விடுவித்தனர் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அதனை நீங்கள் காட்டாவிட்டால் நாங்கள் முடிவெடுக்கவேண்டியிருக்கும்" என்று காட்டமாக கூறி இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியது.

”திமிர்பிடித்த பா.ஜ.க அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி” : பில்கிஸ் பானு வழக்கு - ராகுல் காந்தி வரவேற்பு!

மேலும் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கொள்கை அடைப்படையில் பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரை மட்டும் விடுவித்தது எப்படி? மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களை 14 ஆண்டுகளில் விடுவித்த போது அதே அடிப்படையில் மற்ற கைதிகளை விடுவிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (08.01.2024) 11 பேரின் விடுதலையையும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூட, திமிர்பிடித்த பா.ஜ.க அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி என பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்புக்கு வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகலைதள பதிவில், "தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியைக் கொல்லும் போக்கு ஜனநாயக அமைப்பிற்கு ஆபத்தானது. இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 'குற்றவாளிகளின் புரவலர்' யார் என்பதை நாட்டுக்கு மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்துள்ளது.பில்கிஸ் பானோவின் அயராத போராட்டம், திமிர்பிடித்த பா.ஜ.க அரசுக்கு எதிரான நீதியின் வெற்றியின் அடையாளம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories