இந்தியா

”மாதவிடாய் கால விடுமுறை அவசியமில்லை” : ஸ்மிருதி இரானி கருத்துக்கு வலுக்கும் கடும் கண்டனங்கள்!

ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

”மாதவிடாய் கால விடுமுறை அவசியமில்லை” : ஸ்மிருதி இரானி கருத்துக்கு வலுக்கும் கடும் கண்டனங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாதவிடாய் கால விடுமுறை அவசியமில்லை என கூறிய ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்துக்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில செயலாளர் மு.கண்ணகி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் காலவிடுப்பு மாணவர்கள் தொழிலாளர்களுக்கு என அனைத்து தரப்பினருக்கும் அத்தியாவசியமானது. உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிக சோர்வையும் பலவீனத்தையும் ஏற்ப்படுத்தக்கூடிய இயற்கை உயிரியல் நிகழ்வு என்பது உண்மைதான்.

ஆனால் பெண்களின் ஹார்மோன்களின் சுரப்பு உணவு முறைகள் இரத்த அனுக்களின் எண்ணிக்கை உடல்வாகு பரம்ரைகாரணிகள் போன்றவற்றில் சீரற்ற மாதவிடாய் அதிக உதிரபோக்கு தாங்கி கொள்ளமுடியாத வலியுணர்வு டிஹைரேசன், மயக்கம்,வாந்தி போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும்.

இத்தகைய உடலியல் சிரமங்களை தாங்கி பெண்கள் வேலை செய்ய வேண்டும் என்பது அந்த சமூகத்திற்கு பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது. தனிச்சட்டங்களை இயற்றி 1947முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. கிழக்கு ஆசிய நாடுகள் பலவும் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் 3 முதல் 5

”மாதவிடாய் கால விடுமுறை அவசியமில்லை” : ஸ்மிருதி இரானி கருத்துக்கு வலுக்கும் கடும் கண்டனங்கள்!

நாட்கள் வரைவிடுப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இந்தியாவிலும் கூடகேரளா, பீகார் மாநிலங்களிலும் மாவிடாய் காலவிடுப்பு நடைமுறையில் உள்ளது. பெண்கள் இந்த நாட்டின் முழுகுடி மக்கள். பெண்கள் போக பொருளல்ல. உயிருள்ள , உணர்வுள்ள, உரிமையுள்ள மனித குலத்தின் அடிப்படை சக்தி.

இந்த நாட்டில் பெண்களை அடிமையாக்கி வேலை செய்ய நிர்பந்திப்பதை ஒருகாலும் ஏற்க முடியாது. ஒன்றிய அரசின் அமைச்சர் மகளிர் மேம்பாட்டுதுறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மாதவிடாய்உடல்ஊனமாக கருதி விடுமுறை அவசியமில்லை என்று கூறியிருப்பதை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. இந்திய மாதர் தேசியசம்மேளனம் 3 முதல் 5 நாட்கள் மாதவிடாய் விடுமுறையளித்துசட்டம் இயற்ற ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories