இந்தியா

”கேரளத்தில் நிதி நெருக்கடியை உள்ளாக்கும் ஒன்றிய அரசு” : முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு!

கேரள மாநிலத்தை நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கும் பணியை ஒன்றிய அரசு செய்கிறது என முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

”கேரளத்தில் நிதி நெருக்கடியை உள்ளாக்கும் ஒன்றிய அரசு” : முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் கேரள மாநிலத்திற்கு வருகை தந்தார். அப்போது, அவர்," கேரள மாநிலத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை முறையாக பயன்படுத்தாததால் இம்மாநிலம் நிதி நெருக்கடியைச் சந்திக்கிறது என கூறியுள்ளார்.

இதையடுத்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இக்கருத்திற்குக் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கேரள மாநிலத்திற்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஒன்றிய நிதியமைச்சர் பொய்யான தகவலைக் கூறுகிறார்.

”கேரளத்தில் நிதி நெருக்கடியை உள்ளாக்கும் ஒன்றிய அரசு” : முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு!

மாநிலத்தின் கடன் வாங்கும் அளவை ஒன்றிய அரசு குறைத்ததோடு, ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதையும் பா.ஜ.க அரசு நிறுத்திக் கொண்டது. இப்படி இருக்க மாநில அரசு மீது வேண்டும் என்றே பழிசுமத்த பார்க்கிறார்.

கேரள மாநிலத்தை நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கும் பணியை ஒன்றிய அரசு செய்கிறது. இதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்பினால் போலி செய்தியைப் பரப்பி மாநிலத்தின் தேவையை பா.ஜ.க அரசு மறைக்கிறது. 2017-18 நிதியாண்டு முதல் ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டிய நிதிகளில் பலநூறு கோடிகள் இன்னும் நிலுவையில் உள்ளன" என பதிலடி கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories