ஆசிய விளையாட்டுப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2018ம் ஆண்டு 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது. அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனாவில் நடைபெற்றது.
இதில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று பட்டியலில் 4-ம் இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் முதல்முறையாக 100 பதக்கங்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. அதேபோல் தமிழ்நாடு 27 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
இந்த ஆசிய போட்டியில் கபடிப் பிரிவில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது ஊர்களுக்குத் திரும்பினர். அப்போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வீராங்கனை சினேகால் ஷிண்டேபுனே விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை வரவேற்க அவரது தந்தை மற்றும் உறவினர்கள் காத்திருந்தனர். பின்னர் வெற்றியுடன் வந்த மகளைக் கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றார் அவரது தந்தை. தற்போது இந்த நெகிழ்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும் தந்தையின் அன்பு பாசத்தைக் கொண்டாடி வருகின்றனர்.