இந்தியா

ரூ.2000 நோட்டுகளை மாற்ற கூடுதல் அவகாசம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பின் முழு விவரம் என்ன ?

ரூ.2000 நோட்டுகளை மாற்ற அவகாசத்தை அதிகரித்து ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரூ.2000 நோட்டுகளை மாற்ற கூடுதல் அவகாசம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பின் முழு விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2016-ம் ஆண்டு ஊழலை ஒழிப்பதாக கூறி, இரவோடு இரவாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி, தங்களிடம் இருந்த பணத்தை ஏடிஎம்., வங்கி என வரிசையாக நின்று, பல்வேறு இன்னல்களுக்கு இடையே மாற்றிக்கொண்டனர். இந்த நிகழ்வால் பொதுமக்கள் பலவகையில் துன்பங்களை அனுபவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக புது ரூ.500 நோட்டுகளும், ரூ.2000 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை இந்த ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைய தொடங்கியுள்ளது. இதனிடையே ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறப்போவதாக கடந்த மே மாதம் அறிவித்தது.

அதன்படி பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை செப்டம்பர் 30 வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும், நாள் ஒன்றுக்கு ஒரு நபர் ரூ.20,000 மதிப்பிலான ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தங்களிடமிருந்த ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து பொதுமக்கள் வேறு நோட்டுகளை மாற்றி வந்தனர்.

ரூ.2000 நோட்டுகளை மாற்ற கூடுதல் அவகாசம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பின் முழு விவரம் என்ன ?

ரிசர்வ் வங்கி கொடுத்திருந்த அவகாசம் இன்றோடு முடிவடையவிருந்த நிலையில், அந்த அவகாசத்தை அதிகரித்து ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்ள்ளது.

மேலும், அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகும் ரூ.2000 நோட்டுகள் செல்லும் என்றும், ஆனால் அவற்றை ரிசர்வ் வங்கியின் பட்டியலிடப்பட்டுள்ள 19 அலுவலகங்களில் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஒரு நேரத்தில் அதிகபட்சம் ரூ.20,000 வரை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories