இந்தியா

காவிரி விவகாரம் : “கன்னடர்கள் - தமிழர்கள் இடையே மோதலை உருவாக்கும் பாஜக” - செந்தில்வேல் சிறப்புக் கட்டுரை!

காவிரி விவகாரம் : “கன்னடர்கள் - தமிழர்கள் இடையே மோதலை உருவாக்கும் பாஜக” - செந்தில்வேல் சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘தமிழ்க்கேள்வி’ இணையதள ஊடகத்தின் ஆசிரியர் தி.செந்தில்வேல், வலைதளங்களில் தீட்டியுள்ள சிறப்புக் கட்டுரையில், காவிரிப் பிரச்சினையின் தற்போதைய நிலையினை நடுநிலையோடு எடுத்துரைத்துள்ளார்.

அக்கட்டுரை வருமாறு:–

துப்பில்லாமல் உட்கட்சிச் சண்டையில் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி கள்ள மவுனம் காத்ததையும், மக்களுக்கு நினைவூட்டுவது நம் கடமை.

காவிரி விவகாரத்தில் இன்றைக்கு தமிழ்நாடு சந்தித்து வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஒன்றிய பா.ஜ.க. அரசுதான் என்பதற்கான ஆதாரங்களையும், திட்டமிட்டே மோடி அரசு தமிழ்நாடு பெரும் வஞ்சகத்தைச் செய்தது என்பதையும், மோடி அரசின் அந்த தமிழின விரோத செயலைக் கண்டிக்கக் கூட காவிரி ஆற்று நீர்ச் சிக்கல் இன்று, நேற்று தொடங்கியது அல்ல. பல்லாண்டுகால நீண்ட நெடும் பிரச்சினை.

காவிரி விவகாரம் : “கன்னடர்கள் - தமிழர்கள் இடையே மோதலை உருவாக்கும் பாஜக” - செந்தில்வேல் சிறப்புக் கட்டுரை!

இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வைக் கொண்டு வருவதற்கான ஒரே வாய்ப்பாக நமக்கு அமைந்தது உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பை அப்படியே செயல்படுத்தியிருந்தால் காவிரிச் சிக்கலுக்கு தீர்வு எட்டப்பட்டிருக்கும். தமிழ்நாடு தண்ணீருக்காக கர்நாடகத்திடம் கையேந்தும் நிலையும் வந்திருக்காது. அந்த இடத்தில்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு மாபெரும் துரோகத்தை இழைத்தது.

கலைஞரால் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அப்படியே அமல்படுத்தச் சொன்னது உச்ச நீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பு.பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்காக நடுவர் மன்றம் தமிழ்நாட்டிற்கு திறக்கச் சொன்ன தண்ணீரின் அளவை மட்டும் கொஞ்சம் குறைத்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் மிக முக்கிய அம்சம்.

ஒன்றிய அரசு இதை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்என்றது உச்ச நீதிமன்றம். அந்த காவிரி மேலாண்மை வாரியத்தில் ஒன்றிய அரசின் பிரதி நிதிகள், காவிரி ஆற்று நீர்ச் சிக்கலில் தொடர்புடைய நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகள், ஒரு தலைவர் உள்ளிட்டோர் இடம் பெற வேண்டும். அது மத்திய நீர்வளத்துறையின் கீழ் செயல்பட வேண்டும். மிக மிக முக்கியமாக அந்த வாரியம் Cavuery Water Managment Board வெறும் தொழில்நுட்ப அமைப்பாகஇல்லாமல், நிர்வாக அமைப்பாகவும் இருக்க வேண்டும்.

காவிரி நீரை திறந்து விடுவது குறித்து இன்று நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.
காவிரி நீரை திறந்து விடுவது குறித்து இன்று நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.

அதாவது, கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டால் அந்த தண்ணீரின் அளவை அளந்து குறித்துக் கொள்ளும் அமைப்பாக மட்டும் இன்றி, தண்ணீரை உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் திறக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகவும் இருக்க வேண்டும். இதற்கு உதாரணமாக பக்ரா - பியாஸ் மேலாண்மை வாரியத்தையும் சுட்டிக்காட்டி மிகத் தெளிவான தீர்ப்பைத் தந்தது உச்ச நீதிமன்றம். அதன்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருந்தால் காவிரி ஆற்று நீர்ச் சிக்கல் முடிவுக்கு வந்திருக்கும்.

காரணம், கர்நாடகத்தில், யார் ஆட்சியில் இருந்தாலும், தண்ணீர் திறக்கும் அதிகாரத்தோடு கூடிய ஒரு அமைப்பாக அந்த வாரியம் இருந்திருக்கும். இந்த இடத்தில்தான் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு எதிரான மாபெரும் சதியைச் செய்தது. உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக வாரியம் அமைக்கச் சொன்ன பிறகும் அதைச் செய்யாமல் தங்களுக்கு அந்தத் தீர்ப்பு புரியவில்லை என்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகத் தெளிவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய நிலையில், பாஜக அரசு மிகத் தந்திரமாக வாரியம் அமைப்பதற்கு பதிலாக, காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது. உச்ச நீதி மன்றம் அதிகாரம் மிக்க வாரியத்தை அமைக்கச் சொன்னது Cavuery Water Management Board. ஆனால் பா.ஜ.க. அரசோ காவிரி மேலாண்மை ஆணையம் Cauvery Water Management Authority அமைத்தது. இதுதான் அத்துனணச் சிக்கலுக்கும்காரணம். கர்நாடகத்தில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களிடமே தண்ணீர் திறக்கும் அதிகாரம் தொடரும் சூழல் உருவானது.

காவிரி விவகாரம் : “கன்னடர்கள் - தமிழர்கள் இடையே மோதலை உருவாக்கும் பாஜக” - செந்தில்வேல் சிறப்புக் கட்டுரை!

இத்தனையும் செய்த பா.ஜ.க., கர்நாடகத் தேர்தலில் தோல்வி அடைந்த உடன், காவிரியில் தண்ணீர் திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகத்தில் போராட்டங்களைத் தூண்டத் தொடங்கியுள்ளது. தமிழர்களுக்கு எதிரான சதிச் செயல்களை அரங்கேற்றக் காத்திருக்கிறது. இதன் மூலம், இரு மாநில மக்களையும் மோத விட்டு அதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் குளிர்காய நினைக்கிறது பா.ஜ.க.

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியைச் சுட்டிக் காட்டி கர்நாடகத்தில் காங்கிரசுக்கு எதிரான சதி வேலைகளையும், அதேபோல், அதையே சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு எதிரான வேலைகளையும் செய்யத் தொடங்கி விட்டது பா.ஜ.க. இந்த நரித்தனத்திற்கு சில குள்ள நரிகளும் தமிழ்நாட்டில் உடந்தை. அந்த குள்ளநரிக்கூட்டத்தினர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதைச் சுட்டிக் காட்டி அதேபோல் இந்தியா கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும் என்ற விஷமப் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்.

ஏதோ, எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கொள்கைகளோடு முரண்பட்டு, கூட்டணியை விட்டு வெளியேறியது போல இந்தக் கூட்டம் சித்தரிப்பது நகைச்சுவையின் உச்சம் தி.மு.க. வாஜ்பாயோடு கூட்டணி வைத்திருந்த போதும் சரி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த போதும் சரி, ஒரு குறைந்த பட்ச செயல்திட்டத்தை உருவாக்கி அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கூட்டணி அமைத்தது. வாஜ்பாயோடு கூட்டணியில் இருந்த காலகட்டத்தில் கூட, 'பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது; காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை நீக்கக் கூடாது' இந்தித் திணிப்பு கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து, அதை வாஜ்பாய் அரசாங்கத்தைப் பின்பற்ற வைத்தது.

காவிரி விவகாரம் : “கன்னடர்கள் - தமிழர்கள் இடையே மோதலை உருவாக்கும் பாஜக” - செந்தில்வேல் சிறப்புக் கட்டுரை!

ஆனால், பா.ஜ.க. உடன் கூட்டணியில் இருந்த எடப்பாடி அ.தி.மு.க.வோ, பா.ஜ.க.வின் மக்கள் விரோதச் சட்டங்களான சி.ஏ.ஏ., வேளாண் சட்டத் திருத்த மசோதா, உள்ளிட்ட அனைத்தையும் ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தது.முத்தலாக் தடைச் சட்டத்தை ஆதரித்து மக்களவையில் அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் பேசியது பா.ஜ.க. உறுப்பினர்களை விட மோசமாக இருந்தது.

தி.மு.க. ஆட்சிக் காலம் வரை, ஏன் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரையிலும் கூட தமிழ்நாட்டிற்குள் வந்திடாத நீட் தேர்வை தங்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாட்டிற்குள் அனுமதித்தது வரை பா.ஜ.க.வின் அனைத்து மக்கள் விரோத செயல்களுக்கும் துணை போன எடப்பாடி, அ.தி.மு.க. தேர்தல் நெருங்கும் நேரத்தில், பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்று போடும் நாடகத்தை வைத்துக் கொண்டு தி.மு.க.வை நோக்கி கேள்வி எழுப்புவது அரசியல்அறியாமை. இது பா.ஜ.க.விற்கு துணைபோகும் குள்ள நரித்தனம்.

கூட்டணி இல்லை என்ற அறிவிப்பைக் கூட எடப்பாடியால் சொல்லத் துணிவின்றி கட்சியில் சகாக்களை வைத்துச் சொல்லும் நிலையில் உள்ளது அ.தி.மு.க. பா.ஜ.க.வை உளப்பூர்வமாக எதிர்க்கும் முடிவோடுதான் கூட்டணியை விட்டு அ.தி.மு.க. விலகியது எனில், சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட மோடி அரசின் 7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகளைப் பற்றியும், ஊழலைப் பற்றியும் அதிமுகவோ எடப்பாடியோ வாய் திறந்து கண்டிப்பார்களா?மணிப்பூர் கலவரம் முதல், நீட் மரணங்கள் வரை பா.ஜ.க. அரசால் பறிபோகும் உயிர்களுக்காக குறைந்தபட்ச கண்டனக் குரல்களைத் தருவார்களா? ஒருபோதும் இவை நடக்காது.

காவிரி விவகாரம் : “கன்னடர்கள் - தமிழர்கள் இடையே மோதலை உருவாக்கும் பாஜக” - செந்தில்வேல் சிறப்புக் கட்டுரை!

இரண்டே ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000, மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூபாய் 1000, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, சென்னையில் மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் மிகப் பிரமாண்ட நூலகம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள், நான் முதல்வன் திட்டம், என்று ஏராளமான சாதனைகளை நிகழ்த்திக் காட்டிவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.

மக்கள் கொண்டாடத் தொடங்கி விட்டனர். மக்களவைத் தேர்தலில் 40 க்கு நாற்பதும் தி.மு.க. கூட்டணி வெல்லும் சூழல். இவை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, பா.ஜ.க.விற்கு எதிரான மிக வலுவான கூட்டணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் பாய்ச்சலை எதிர்கொள்ள முடியாத பா.ஜ.க. கடைசியாக வழக்கம் போல் கையில் எடுக்கக் காத்திருக்கும் ஆயுதம்தான் கலவரம்.

தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்ட முடியாது, மக்கள் மிகுந்த ஒற்றுமை உணர்வோடு உள்ளனர் என்பதைப் புரிந்து கொண்ட பா.ஜ.க. கன்னடர்கள் - தமிழர்கள் இடையே இன மோதலை உருவாக்க முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. பா.ஜ.க. வின் இந்த அரசியல் சதிக்கு துணைபோக சில குள்ள நரிகளும் தயார் நிலையில் உள்ளன. வட மாநிலங்களில் மதக்கலவரங்களைத் தூண்டிவிட்டு அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது போல் தமிழ்நாட்டில் ஒருபோதும் நடக்காது.

தமிழ்நாடு பண்பட்ட மண். பகுத்தறிவுப் பார்வை கொண்ட மண். பா.ஜ.க.வின் சதித்திட்டத்திற்கும் சரி, பா.ஜ.க.வின் பி - டீம்களின் சதித்திட்டத்திற்கும் சரி, தமிழ்நாட்டு மக்கள் நாம் ஒரு போதும் பலியாகிவிட மாட்டோம் என்பதை உரக்கச் சொல்வோம். தமிழ்நாட்டைக் காப்போம்.

banner

Related Stories

Related Stories