இந்தியா

விக்ரம் லேண்டரின் நோக்கமே இதுதான்.. 100% வெற்றியடைந்த 'சந்திரயான் 3' திட்டம்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன ?

சந்திரயான் 3 திட்டம் 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

விக்ரம் லேண்டரின் நோக்கமே இதுதான்.. 100% வெற்றியடைந்த 'சந்திரயான் 3' திட்டம்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது.

இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிறக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரண் லேண்டர் சில நாட்களுக்கு முன்னர் வெற்றிகரமான நிலவில் தரையிறக்கி அதன் ரோவர் நிலவில் தனது ஆய்வுப் பணியை தொடங்கியது.பின்னர் நிலவில் 14 நாட்கள் ஆய்வு செய்தபின்னர் நிலவில் சூரியன் மறைந்ததால் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை உறக்கநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டன.

விக்ரம் லேண்டரின் நோக்கமே இதுதான்.. 100% வெற்றியடைந்த 'சந்திரயான் 3' திட்டம்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன ?

நிலவில் மீண்டும் சூரியன் உதயமாகிய பின்னர் இந்த லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது.அதன்படி விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியில் சூரிய ஒளி மீண்­டும் வந்த நிலையில், ரோவர் மற்­றும் விக்­ரம் லேண்­டர் ஆகி­ய­வற்­று­டன் தொடர்பை மீண்­டும் ஏற்­ப­டுத்த இந்­திய விண்­வெளி ஆய்வு நிறு­வ­ன­மான இஸ்ரோ முயற்­சி­களை மேற்­கொண்­ட­தில், இது­வரை எந்த சிக்­ன­லும் கிடைக்­கப் பெற­வில்லை. அதனை தொடர்பு கொள்­வ­தற்­கான முயற்­சி­கள் தொடர்ந்து நடை­பெ­றும் என்­று இஸ்ரோ தெரிவித்தது.

இந்த நிலையில், இந்த முயற்ச்சி தோல்வியை சந்தித்தாலும் இந்த திட்டம் 100 % வெற்றியை பெற்றுள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்துப் பேசிய சிலர், "நிலவில் பகல் பொழுதுக்கும் இரவு பொழுதுக்கும் இடையே ஏறத்தாழ 200 டிகிரி செல்சியஸ் வெப்ப வேறுபாடு இருக்கும். இதன் காரணமாக விண்கலத்தில் உள்ள பொருட்களும் பாதிப்படைந்திருக்கின்றன.

ஆனால், விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றின் நோக்கம் நிலவில் சரியான இடத்தில் தரையிறங்குவது மற்றும் நிலவில் 14 நாட்கள் ஆய்வு செய்வதுதான். அது சரியாக செய்யப்பட்டதால் இந்த திட்டம் 100% வெற்றியை பெற்றுள்ளது. அதன் பின்னர் அதில் நடத்திய ஆய்வுகள் எல்லாம் கூடுதலான வெற்றி என்றுதான் சொல்லமுடியும்"என தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories