இந்தியா

சந்திரயான் - 3 : விக்ரம் லேண்டரின் ஆயுள் 14 நாட்கள் மட்டுமா? நிலவில் அது செய்யும் ஆய்வுகள் என்ன?

சந்திரயான் - 3 விண்கலத்தில் இருக்கும் விக்ரம் என்ற லேண்டர் இன்று 6.03 மணியளியில் விக்ரம் நிலவில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது.

சந்திரயான் - 3 : விக்ரம் லேண்டரின் ஆயுள் 14 நாட்கள் மட்டுமா? நிலவில் அது செய்யும் ஆய்வுகள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. குறைத்த செலவில் செய்யப்பட்ட இஸ்ரோவின் இந்த சாதனையை பல்வேறு உலகநாடுகளும் பாராட்டின. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' -வின் ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரயான் - 3 விண்கலத்தில் இருக்கும் விக்ரம் என்ற லேண்டர் இன்று 6.03 மணியளியில் விக்ரம் நிலவில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது.

சந்திரயான் - 3 : விக்ரம் லேண்டரின் ஆயுள் 14 நாட்கள் மட்டுமா? நிலவில் அது செய்யும் ஆய்வுகள் என்ன?

'சந்திரயான் 3' தரையிறங்குவது எப்படி ?

சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவை தொடர்ந்து நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும். பின்னர் அது நிலவுக்கு 30கிமீ உயரத்தில் இருந்து படிப்படியாக அதில் இருக்கும் புரோபல்சன் கொடுக்கும் சிறிய உந்து விசை கொண்டு நிலவை நோக்கி தரையிறக்கப்படும்.

இது தவிர விக்ரம் லேண்டர் தரையிறங்க குறிக்கப்பட்டுள்ள இடத்தை அதில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு உறுதிசெய்தபின்னர் தனது வேகத்தை படிப்படியாக குறைத்து அந்த இடத்தில் இறங்கத்தொடங்கும். பின்னர் நிலவுக்கு 10 மீட்டர் உயரத்தில் இருக்கும்போது, விக்ரம் லேண்டரின் உந்து விசை முற்றிலும் நிறுத்தப்பட 10 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழும்.

விக்ரம் லேண்டர் கீழே விழும்போது அந்த இடத்தில இருந்து புழுதிகள் எழும். பின்னர் எழுந்த புழுதிகள் அடங்கியபின் விக்ரம் லேண்டரின் உள்ளே இருக்கும் ரோவர் வெளியே வந்து நிலவின் தென்பகுதியில் தனது ஆய்வைத் தொடங்கும். பின்னர் ரோவர் நிலவின் பல பகுதிகளுக்கும் சென்று அங்கிருக்கும் தகவல்களை விக்ரம் லேண்டருக்கும், நிலவின் மேல் சுற்றிவரும் 'சந்திரயான் 2' -வின் ஆர்பிட்டருக்கும் அனுப்பும்.அங்கிருந்து ஆர்பிட்டர் இஸ்ரோவுக்கு அது குறித்த தகவல்களை அனுப்பும்.

இதில் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் வெறும் 14 நாட்கள் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நிலாவின் தென் துருவத்தில் சூரிய ஒளி எப்போதும் படாத நிலையில், சூரிய தகடுகள் மூலம் அங்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. இதன் காரணமாக 14 நாட்கள் மட்டுமே செயல்படும் வகையில் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் உருவாக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் - 3 : விக்ரம் லேண்டரின் ஆயுள் 14 நாட்கள் மட்டுமா? நிலவில் அது செய்யும் ஆய்வுகள் என்ன?

'சந்திரயான் 3' செய்யும் ஆய்வுகள் என்ன ?

விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை நிலாவில் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து அதனை பூமிக்கு அனுப்பும். இதன் மூலம் அதில் ஏற்படும் மாற்றங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும். மேலும் நிலவின் வளிமண்டலம் சாதாரணமாக உள்ளதா என்றும், அதன் தன்மைகளை குறித்தும் தகவல்களை அனுப்பும்.

இது தவிர நிலாவினி மண் கெட்டியாக உள்ளதா, அல்லது தூசுகளாக உள்ளதா போன்ற தகவல்களையும் அது தெரியப்படுத்தும். இந்த கலத்தில் அதிர்வை கணக்கிடக்கூடிய கருவிகளும் அனுப்பப்பட்டுள்ளதால் அதன் மூலம் நிலவில் ஏற்படும் அதிர்வுகள் குறித்தும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

இது தவிர பூமியை விட்டு நிலா சிறிது சிறிதாக விலகி செல்வதாக ஆய்வாளர்கள் நீண்ட நாள் கூறி வரும் நிலையில், அது உண்மையை ? என்பது குறித்தும் அப்படியே விலகி செல்வதாக இருந்தால் அது எவ்வளவு வேகமாக விலகி செல்கிறது என்பது குறித்த துல்லியமான தகவல்களையும் இது பூமிக்கு அனுப்பும். இதனை கண்டறிய ஒரு சிப் கலனில் பொறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories