இந்தியா

நிலத்தில் மாடு மேய்ந்ததால் ஆத்திரம்.. தலித் நபரை கட்டி வைத்து தாக்கிய கொடூரம்.. தெலுங்கானாவில் அதிர்ச்சி!

தெலங்கானா மாநிலத்தில் தலித் நபருக்கு சொந்தமான மாடு தனது நிலத்தில் மேய்த்ததால் ஆத்திரமடைந்த ஒருவர் தலித் நபரை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

நிலத்தில் மாடு மேய்ந்ததால் ஆத்திரம்.. தலித் நபரை கட்டி வைத்து தாக்கிய கொடூரம்.. தெலுங்கானாவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

3 மாதங்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமீபத்தில் வைரலான நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் காதில் ஒருவர் சிறுநீர் கழித்துள்ள வீடியோ வெளியாகி சர்ச்சையை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன்பின்னர் தலித் இளைஞர் ஒருவரின் முகத்தின் மீது ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ஒருவர் மலத்தை பூசிய சம்பவம் நடைபெற்றது.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் தலித் நபருக்கு சொந்தமான மாடு தனது நிலத்தில் மேய்த்ததால் ஆத்திரமடைத ஒருவர் தலித் நபரை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. தெலங்கானா மாநிலம் மஞ்சேரியில் மாவட்டம் ஷெட்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கா பாபு. விவசாயியான இவர், தனது மாட்டை வழக்கம் போல மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார்.

நிலத்தில் மாடு மேய்ந்ததால் ஆத்திரம்.. தலித் நபரை கட்டி வைத்து தாக்கிய கொடூரம்.. தெலுங்கானாவில் அதிர்ச்சி!

அப்போது, இவரின் மாடு ராமரெட்டி என்பவரின் வயவெளிக்குள் சென்றுள்ளது. இதனை பார்த்த ராமரெட்டி மாடுகளை அடித்து விரட்டியதோடு அங்கு வந்த துர்கா பாபுவையும் சாதி ரீதியாக தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதன் பின்னர் துர்கா பாபு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆத்திரம் அடங்காத ராமரெட்டி துர்கா பாபுவின் வீட்டுக்கு சென்று அவரை பிடித்து மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் துர்கா பாபு படுகாயமடைந்த நிலையில், இது குறித்த வீடியோவை ராமரெட்டி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட துர்கா பாபு காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன்படி எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலிஸார் ராமரெட்டியை கைது செய்தனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories