இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. அதிலும் வடமாநிலங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே உலுக்கும் அளவு கொடுமையாக உள்ளது. அந்த வகையில் ராஜாஸ்தானின் ஒரு பெண் கடன் வாங்கிய கடனின் வட்டிக்காக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள நாகவுர் என்ற இடத்தில் மெஹ்ரதின் என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரிடம் ஒரு ஒருவர் தனது கணவரின் சிகிச்சைக்காக ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதற்கு வட்டியாக மாதமாதம் ரூ.1000 வட்டியாக செலுத்திவந்துள்ளார்.
அது தவிர அவர் தான் வாங்கிய கடனில் 5 ஆயிரம் ரூபாயை திரும்பகொடுத்ததோடு மீதம் இருக்கும் கடனுக்கு மாதம் ரூ.500 வட்டியாக கொடுத்துவந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணால் ஒரு மாதம் மட்டும் குடும்ப சூழல் காரணமாக வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த மெஹ்ரதின் கடன் வாங்கிய பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை தனது மொபைல்போனில் விடியோவாக பதிவுசெய்து அந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டி அடிக்கடி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மெஹ்ரதின் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அந்த பகுதி மக்கள் அந்த பெண்ணை மீட்ட நிலையில், அந்த பெண் இது குறித்து காவல் நிலைய்த்தில் புகார் அளித்துள்ளார் . அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் மெஹ்ரதினை கைது செய்தனர்.