இந்தியா

”அமைதியா இருங்க இல்லனா உங்கள் வீட்டில் ரெய்டு நடக்கும்".. மக்களவையில் எதிர்க்கட்சிகளை மிரட்டிய அமைச்சர்!

அமைதியாக இல்லாவிட்டால் உங்கள் வீட்டுக்கும் அமலாக்கத்துறை வரும் என மக்களவையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிய அமைச்சர் மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”அமைதியா இருங்க இல்லனா உங்கள் வீட்டில் ரெய்டு நடக்கும்".. மக்களவையில் எதிர்க்கட்சிகளை மிரட்டிய அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடர் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் வன்முறை குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் இந்திய கூட்டணி எம்.பிக்கள் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதேபோல் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் கொண்டுவந்துள்ளனர்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று விதியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு விவாதம் எதுவும் நடத்தாமல் பல்வேறு மசோதாக்களைத் தாக்கல் செய்து வருகிறது.

”அமைதியா இருங்க இல்லனா உங்கள் வீட்டில் ரெய்டு நடக்கும்".. மக்களவையில் எதிர்க்கட்சிகளை மிரட்டிய அமைச்சர்!

அந்தவகையில் மக்களவையில் டெல்லி அரசில் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இம்மசோதா மீது பேசிய தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன்,"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைப் பறிப்பது ஜனநாயக விரோதச் செயல். டெல்லி அரசின் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.

காவல்துறை, பொது அமைதி மற்றும் நிலம் தவிர்த்து அனைத்து அதிகாரங்களும் டெல்லி மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என சுட்டிக்காட்டினார். அதேபோல் ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்களும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

இதனிடையே ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர்.

இதனால் ஆவேசமடைந்த ஒன்றிய அமைச்சர், "அமைதியாக இருங்கள் இல்லை என்றால் எங்கள் வீடுகளுக்கு அமலாக்கத்துறை வரும்" என மக்களவையிலேயே எச்சரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த மிரட்டல் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒன்றிய அரசு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வரும் நிலையில் அது உண்மைதான் என்பது போல் அமைந்துள்ளது ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகியின் மிரட்டல் பேச்சு

banner

Related Stories

Related Stories