இந்தியா

”பா.ஜ.க மீண்டும் வென்றால் எல்லா மாநிலமும் மணிப்பூராக மாறும்” : எச்சரிக்கை விடுத்த ஜி.ராமகிருஷ்ணன்!

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வென்றால் எல்லா மாநிலமும் மணிப்பூராக மாறும் அபாயம் ஏற்படும் என ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

”பா.ஜ.க மீண்டும் வென்றால் எல்லா மாநிலமும் மணிப்பூராக மாறும்” : எச்சரிக்கை விடுத்த ஜி.ராமகிருஷ்ணன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி மாநிலம், லாஸ்பேட்டை தொகுதி புதிதாக கட்டப்பட்டுள்ள தி.மு.க அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஏழை, எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கழகச் செயலாளர் தியாகராஜன் தலைமையில் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கழகத்தின் மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா சிறப்பு விருந்தினராக கலந்து புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

”பா.ஜ.க மீண்டும் வென்றால் எல்லா மாநிலமும் மணிப்பூராக மாறும்” : எச்சரிக்கை விடுத்த ஜி.ராமகிருஷ்ணன்!

மேலும் இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், கழக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சிபிஎம்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், ”ஒன்றியத்திலும், மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றால் அதை பெருமையுடன் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா டபுள் என்ஜின் அரசு என கூறிவந்தனர்.

”பா.ஜ.க மீண்டும் வென்றால் எல்லா மாநிலமும் மணிப்பூராக மாறும்” : எச்சரிக்கை விடுத்த ஜி.ராமகிருஷ்ணன்!

ஆனால் தற்போது இந்த டபுள் என்ஜின் அரசு ஆட்சியில் இருக்கும் மணிப்பூரில் என்ன கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளே வேதனையுடன் பார்த்து கொண்டிருக்கிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த கொடூர வன்முறைகள் கடந்த 80 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் நிலையில் இது பற்றிஎல்லாம் பிரதமர் மோடி பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார். நாடாளுமன்றத்திலும் விளக்கம் கொடுக்காமல் ஓடி ஒளிந்து கொள்கிறார்.

2024 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு அனுமதித்தால், எல்லா மாநிலமும் மணிப்பூராக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதனால் தான் 26 கட்சிகள் இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டணி பா.ஜ.கவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியிலும் நடைறுவது ஆட்சியல்ல ஒரு காட்சி. இந்த ஆட்சியையும், காட்சியையும் நாம் அகற்ற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories