இந்தியா

RTI கேள்விக்கு 40,000 பக்கத்துக்கு பதில்.. கார் முழுக்க நிரம்பிய சோகம்.. ஆனால் இறுதியில் நடந்த ட்விஸ்ட்

RTI கேள்விக்கு 40 ஆயிரம் பக்கத்தில் பதில் அளிக்கப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

RTI கேள்விக்கு 40,000 பக்கத்துக்கு  பதில்.. கார் முழுக்க நிரம்பிய  சோகம்.. ஆனால் இறுதியில் நடந்த ட்விஸ்ட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்திய பிரதேச மாநில தலைநகர் இந்தூரைச் சேர்ந்த தர்மேந்திர சுக்லா என்ற நபர் கொரோனா காலத்தில் மாநில அரசு கொள்முதல் செய்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகாணங்கள் தொடர்பாக விவரங்களை தருமாறு தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், இவரின் இந்த கேள்விக்கு ஒரு மாதம் கடந்தும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து தர்மேந்திர சுக்லா ஆர்.டி.ஐ-க்கான முதல் மேல்முறையீட்டு அதிகாரியான சரத் குப்தா என்பவரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் கேட்ட தகவலை வழங்குமாறு அந்த அதிகாரியும் உத்தரவிட்டுள்ளார்.

அதன் படி தர்மேந்திர சுக்லா கேட்ட கேள்விக்கான பதில்கள், 40,000 பக்கங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை தர்மேந்திர சுக்லா தனது கார் முழுக்க நிரப்பி தனது வீட்டுக்கு எடுத்துச்சென்றுள்ளார். ஆனால், அதன் பின்னர்தான் அரசுக்கு பெரும் சிக்கல் ஒன்று எழுந்துள்ளது,

RTI கேள்விக்கு 40,000 பக்கத்துக்கு  பதில்.. கார் முழுக்க நிரம்பிய  சோகம்.. ஆனால் இறுதியில் நடந்த ட்விஸ்ட்

ஆர்.டி.ஐ விதிமுறையின்படி கேள்வி எழுப்பியவரிடம் பதிலுக்கு கட்டணமாக,பக்கம் ஒன்றுக்கு ரூ.2 வசூலிக்கப்படும். அதேநேரம் இந்த விவரங்களை ஒரு மாதத்துக்குள் அளிக்காவிட்டால் கட்டணமின்றி அதனை மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

இதில் இந்த விவகாரத்தில் 40,000 பக்கங்ள் அடிக்க கட்டணமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விதிப்படி தர்மேந்திர சுக்லா கேள்வி எழுப்பி ஒரு மாதம் கடந்த பின்னரே இந்த தகவல்கள் வழங்கப்பட்டதால் விதிமுறைப்படி அவருக்கு தகவல்கள் கட்டணமின்றி வழங்கப்பட்டு விட்டன. இதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள ரூ.80,000 இழப்புக்கு யார் காரணம் என்ற அறிய துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories