மத்தியப் பிரதேச மாநிலம் சாட்னா பகுதியை அடுத்துள்ளது மைஹார் என்ற நகரம். இங்கு 12 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் சிறுமி சாலையோரத்தில் மயக்கமாகி கொடூர நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட அந்த பகுதி வாசிகள் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, உடனடியாக போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்து விசாரணை மேற்கொள்ளும்போது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. அதோடு சிறுமியின் உடல்களில் கடித்த தடங்களும், இரத்த கோரங்களும் இருந்துள்ளது. மேலும் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் கடினமான பொருளை உள்ளே செலுத்தியுள்ளதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் அமைந்திருக்கும் ‘மா சாரதா தேவி’ கோயிலில் பணிபுரியும் ஊழியர்களிடமும் விசாரித்தனர். அவர்களது பதில் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்துள்ளது. எனவே அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கோயில் ஊழியர்களான ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் படோலியா ஆகியோர் தான் சிறுமியை வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். கோயிலில் இருந்துகொண்டு சிறுமியை வன்கொடுமை செய்த அவர்களை, கோயில் நிர்வாகம் உடனடியாக பணி நீக்கம் செய்ததோடு, இது கோயிலுக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக வருத்தம் தெரிவித்தனர்.
தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அவர்கள் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்த்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.