மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜ.க. தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கிரித் சோமையாவின் ஆபாச வீடியோ மராத்தி தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது. மொத்தம் 8 மணி நேரத்திற்கு 35 விடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரித் சோமையாவுக்கு எதிராக, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்ததையடுத்து, இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆபாச வீடியோ மூலம் ஆளும் கட்சியின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. பா.ஜ.க. தலைவரின் ஆபாச வீடியோ வெளியான விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கிரித் சோமையா மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. அரசு பெண் அதிகாரிகளை மிரட்டி பணம் பறிப்பதும் அவர்களை மிரட்டி பணியவைப்பதையுமே பாஜக தலைவர் கிரித் சோமையா, வாடிக்கையாக கொண்டுள்ளார்.
மேலும், அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம், பல்வேறு அரசியல் கட்சிகளை அச்சுறுத்தி வந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, பொய் வழக்குகளை பதிவு செய்து ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளை விசாரிக்கக் கூறி கிரித் சோமையா பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இப்படி கிரித் சோமையா குறித்து அடுத்தடுத்து சர்ச்சை கருத்துகள் வெளியாகி மகராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது பா.ஜ.க கட்சிக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்தியதால் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கிரித் சோமையா குறித்து வீடியோ வெளியிட்ட லோக்ஷாஹி மராத்தி தொலைக்காட்சி சேனல் முடக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பா.ஜ.க தனது உண்மையை மறைக்க பார்க்கிறது என தொலைக்காட்சி முடக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கிரித் சோமையாவை கண்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.