மத்திய பிரதேச மாநிலம் டாடியா பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி தனது சகோதரியுடன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது நான்கு இளைஞர்கள் இவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
பின்னர் இவர்கள் இருவரையும் ஒரு வீட்டிற்குள் இழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நான் பேரும் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றனர். அப்போது இவர்களைத் தடுக்க முயன்ற அவரது சகோதரியை அடித்துக் கட்டிவைத்துள்ளனர்.
பிறகு அவர் கண்முன்னே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து அந்த நான்கு பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து வீட்டிற்குச் சென்ற சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இவர்களை மீட்ட குடும்பத்தினர் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் தங்களுக்கு நடந்த சம்பவத்தை போலிஸாரிடம் கூறியுள்ளது.
இதன் பேரில் போலிஸார் விசாரித்தபோது சிறுமியை வன்கொடுமை செய்த நான்கு பேரில் ஒருவன் பா.ஜ.க நிர்வாகியின் மகன் என்றும் இவர் சிறுமி படிக்கும் அதே பள்ளியில் படித்து வருவதும் தெரியவந்தது.
இந்த வன்கொடுமை சம்பவத்தில் பா.ஜ.க நிர்வாகியின் மகன் சிக்கியுள்ளதால் முதலில் போலிஸார் வழக்குப் பதிவு செய்யத் தயங்கியுள்ளனர். பிறகு பதிக்கப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள் போராட்டம் நடத்திய பிறகே போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பின்னர் தலைமறைவாக இருந்த பா.ஜக நிர்வாகியின் மகன் உட்பட மூன்று பேரை போலிஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் பா.ஜ.க நிர்வாகியின் மகன் சிக்கியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.