இந்தியா

எவ்வளவு தைரியம் இருந்தா என் மகளை மிரட்டுவ? .. விமானத்தில் திடீரென மோதிக்கொண்ட இரு பயணிகள்: Viral video!

விமானத்தில் இரண்டு பயணிகள் வாக்குவாதம் செய்து கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

எவ்வளவு தைரியம் இருந்தா என் மகளை மிரட்டுவ? .. விமானத்தில் திடீரென மோதிக்கொண்ட இரு பயணிகள்: Viral video!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையிலிருந்து டேராடூனுக்கு கடந்த ஜூன் 25ம் தேதி விஸ்தார விமானம் சென்றது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனக்குப் பின்னால் அமர்ந்திருந்த பெண் பயணியைத் தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் அந்த பெண்ணின் அருகே அமர்ந்திருந்த அவரது தந்தை அந்த பயணியிடம் ஏன் இப்படி தொல்லை கொடுக்கிறீர்கள் என கூறியுள்ளார். இதனால் இரு பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விமானப் பணிப்பெண்கள் தலையிட்டும் இவர்கள் வாக்குவாதத்தை நிறுத்தாமல் தொடர்ந்து சண்டைபோட்டுக் கொண்டே இருந்தனர். இதனால் சில பயணிகள் அச்சமடைந்துள்ளனர். ஒருகட்டத்தில் அவர்கள் இருவரும் அமைதியடைந்துள்ளனர்.

தற்போது பயணிகள் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories