மத்தியப் பிரதேச மாநிலம் ராவே மாவட்டத்தில் கோட்வாலி பகுதியை சேர்ந்தவர் பரத் மிஸ்ரா. இவருக்கு சுமித்ரி என்ற மனைவி இருந்துள்ளார். இதில் சிறிது நாட்களாக சுமித்ரியை காணாமல் இருந்துள்ளது. இது குறித்து சுமித்ரியின் சகோதரர் அபத் திவாரி அவரின் கணவரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆனால், அவர் சரியாக பதிலளிக்காத காரணத்தால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி பரத் திவாரி வீட்டிற்கு வந்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மனைவியின் சடலத்தை கடந்த 3 நாட்களாக பிரீசரில் வைத்திருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த சடலத்தை மீட்ட போலிஸார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கணவர் பரத் திவாரியிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டபோது,தனது மனைவி மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.
மேலும், தனது மகன் மும்பையில் வேலை பார்த்து வருவதாகவும், இறுதி சடங்கிற்கு மகன் வரவேண்டும் என்பதற்காவே உடலை ஃப்ரீசரில் வைத்து பாதுகாத்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் பரத் திவாரி தனது மனைவியை அடித்து கொலை செய்ததாக சுமித்ரியின் சகோதரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பேசியுள்ள போலிஸார், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர், அதன் அறிக்கை வந்த பின்னரே இது குறித்த உண்மை தெரியவரும் என கூறியுள்ளனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.