மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று 32 பயணிகளுடன் புனேவுக்கு சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து புல்தானா மாவட்டம் அருகே விரைவு சாலையில் சென்றது.
அப்போது திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் பயணிகள் பேருந்திலிருந்து வெளியேவர முயன்றனர். ஆனால் தீ பேருந்து முழுவதும் பரவியது. இதனால் பேருந்து பயணம் செய்த 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும் 8 பேர் பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டுள்ளது என்பது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தை அடுத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.