இந்தியா

மும்பை - டெல்லி பறக்கும் விமானத்தில் சிறுநீர், மலம் கழித்த நபர்.. அதிரடி ந்டவடிக்கை எடுத்த அதிகாரிகள் !

மும்பை - டெல்லி செல்லும் விமானம் ஒன்றில் பயணித்த பயணி ஒருவர் தனது இருக்கை பக்கத்திலேயே சிறுநீர், மலம் கழித்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

மும்பை - டெல்லி பறக்கும் விமானத்தில் சிறுநீர், மலம் கழித்த நபர்.. அதிரடி ந்டவடிக்கை எடுத்த அதிகாரிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மும்பையில் இருந்து டெல்லிக்கு நாள்தோறும் ஏர் இந்தியா விமானம் செல்கிறது. தினமும் இங்கே பயணிகள் பயணிக்கும் நிலையில் சம்பவத்தன்றும் பல்வேறு பயணிகள் பயணித்தனர். அப்போது அதில் ராம் சிங் என்ற பயணியும் பயணம் செய்தார். ஆரம்பத்தில் இருந்தே அவரால் சில சில தொந்தரவுகள் பயணிகளுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் விமானத்தில் குடிபோதையில் அவர் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென அவசரமாக இயற்கை அழைப்பு வந்துள்ளது. தான் விமானத்தில் பறந்து கொண்டிருப்பதையும் அறியாமல், தனது இருக்கைக்கு கீழே சிறுநீர் கழித்தார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை திட்டிக்கொண்டிருந்தனர்.

மும்பை - டெல்லி பறக்கும் விமானத்தில் சிறுநீர், மலம் கழித்த நபர்.. அதிரடி ந்டவடிக்கை எடுத்த அதிகாரிகள் !

இதனால் அவர் சிறுநீர் கிழிப்பதோடு நின்றுவிடாமல், மலமும் கழித்துள்ளார். இதனை கண்ட சக பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து விமான ஊழியர்களிடம் புகார் அளித்தனர். இதையடுத்து உடனே விரைந்து வந்த அதிகாரிகள் அவரை எச்சரித்து, தனியாக அழைத்து சென்று அமர வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து விமான ஊழியர்கள், டெல்லி விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபட்ட ராம் சிங்கை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மீதுள்ள குற்றம் நிரூபணம் ஆனது.

மும்பை - டெல்லி பறக்கும் விமானத்தில் சிறுநீர், மலம் கழித்த நபர்.. அதிரடி ந்டவடிக்கை எடுத்த அதிகாரிகள் !

மேலும் அவர் சக பயணி மீது எந்த வித சம்பவத்தையும் செய்யவில்லை என்றும், தனது இருக்கை பக்கத்தில் தான் இவ்வாறு நடந்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருக்கும் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாக விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories