இந்தியா

வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை.. மரத்தில் கட்டிவைத்து அடித்த பெண் வீட்டார்: சம்பவத்தின் பின்னணி என்ன?

உத்தர பிரதேசத்தில் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையைப் பெண் வீட்டார் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை.. மரத்தில் கட்டிவைத்து அடித்த பெண் வீட்டார்: சம்பவத்தின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இப்போது எல்லாம் திருமணம் என்றால் வரதட்சணை இல்லாமல் நடப்பது இல்லை. ஒரு சில திருமணங்களே வரதட்சணை இல்லாமல் நடக்கிறது. இதுவும் காதல் திருமணங்களில்தான் இதை எதிர்பார்க்க முடியும்.

இந்நிலையில் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையைப் பெண் வீட்டார் மரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியைச் சேர்ந்தவர் அமர்ஜீத் வர்மா. இவருக்குக் கடந்த செவ்வாயன்று திருமணம் நடக்க இருந்தது. இவரது திருமணத்திற்கு நண்பர்கள் பலரும் வந்திருந்தனர்.

இவர்கள் பெண் வீட்டாரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது மேடையில் இருந்த மணமகன் திடீரென பேசியதை விட அதிகமான வரதட்சணை கேட்டுள்ளார்.

வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை.. மரத்தில் கட்டிவைத்து அடித்த பெண் வீட்டார்: சம்பவத்தின் பின்னணி என்ன?

இதனால் ஆவேசமடைந்த பெண் வீட்டார் மணமகனைப் பிடித்து அங்கிருந்த மரத்தில் கட்டிவைத்து அடித்தனர். மகனை மீட்க முயற்சி செய்தும் மணமகன் வீட்டாரால் முடியவில்லை.

பின்னர் இதுபற்றி அறிந்து அங்கு வந்த மந்தடா காவல் நிலைய போலிஸார் மணமகனை வீட்டு இருகுடும்பத்தினருடனும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை. திருமண ஏற்பாட்டிற்காக அதிக செலவு செய்துள்ளதால் மணமகன் வீட்டார் பணம் கொடுக்க வேண்டும் என மணமகள் வீட்டார் வைத்துள்ளனர்.

இதையடுத்து இரு குடும்பத்தினருடன் போலிஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையைப் பெண் வீட்டார் மரத்தில் அடித்துவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories