இந்தியா

பேரம் பேசுவதில் தகராறு.. பயணியை அடித்தே கொன்ற ஆட்டோ ஓட்டுநர்.. கைது செய்த போலிஸ் !

ஆட்டோவிற்கு கூடுதல் கட்டணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பயணியை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பேரம் பேசுவதில் தகராறு.. பயணியை அடித்தே கொன்ற ஆட்டோ ஓட்டுநர்.. கைது செய்த போலிஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் வடமேற்கு பெங்களூருவில் அமைந்துள்ளது ஹெக்கனஹல்லி. இங்கு அஷ்வத் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். 27 வயதாகும் இவர் தான் அவரது குடும்பத்தை பார்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது. தினமும் பலபேரை சவாரி ஏற்றி சென்று வந்துள்ளார்.

இந்த சூழலில் சம்பவத்தன்று ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 சகோதரர்கள் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து யஸ்வந்த்பூர் ரயில் நிலையம் செல்வதற்காக வந்துள்ளனர். அப்போது அஷ்வத்தின் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். அப்போது இருவரும் முதலில் 100 ரூபாய் தருவதாக பேசி ஆட்டோவோல் பயணம் செய்துள்ளனர்.

பேரம் பேசுவதில் தகராறு.. பயணியை அடித்தே கொன்ற ஆட்டோ ஓட்டுநர்.. கைது செய்த போலிஸ் !

இந்த நிலையில், ஆட்டோ ராஜாதி நகர் என்ற பகுதி அருகே சென்ற போது நிறுத்திய அஷ்வத், ஆளுக்கு 1500 ரூபாய் என 3000 ரூபாய் கொடுத்தால்தான் ஆட்டோவை எடுப்பதாக கூறியுள்ளார். இதனால் ஆட்டோ ஓட்டுநருக்கு பயணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இதில் மேலும் ஒரு காசு கூட கொடுக்க முடியாது என்று பயணிகளில் ஒருவர் கூறுகையில், ஓட்டுநர் அஷ்வத் அவரை தாக்கியுள்ளார்.

பேரம் பேசுவதில் தகராறு.. பயணியை அடித்தே கொன்ற ஆட்டோ ஓட்டுநர்.. கைது செய்த போலிஸ் !

வயிறு மற்றும் நெஞ்சு பகுதிகளில் தாக்கியதால் அந்த பயணியில் ஒருவர் சுருண்டு விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரனையும் தாக்கியுள்ளார். இதனை கண்ட ரோந்து பணிக்கு வந்த போலீசார் உடனே அடிபட்டு கிடந்த பயணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து பயணியை தாக்கி கொலை செய்ததாக ஆட்டோ ஓட்டுநர் அஷ்வத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆட்டோவிற்கு கூடுதல் கட்டணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பயணியை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories