இந்தியா

மயக்கமடைந்து கிடந்ததாக பொய் கூறிய கல்லூரி.. கொந்தளித்த மாணவர்கள்.. கேரள மாணவி மரணத்தின் பின்னணி என்ன ?

கேரள மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில், அவரது மரணத்தின் காரணத்தை மறைத்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயக்கமடைந்து கிடந்ததாக பொய் கூறிய கல்லூரி.. கொந்தளித்த மாணவர்கள்.. கேரள மாணவி மரணத்தின் பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்துள்ள திருவன்குளம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா (20). தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்தார். உணவுத் தொழில்நுட்பத் துறையில் இரண்டாமாண்டு படித்து வந்த இவர், கடந்த 2-ம் தேதி அவரது விடுதி அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது.

மயக்கமடைந்து கிடந்ததாக பொய் கூறிய கல்லூரி.. கொந்தளித்த மாணவர்கள்.. கேரள மாணவி மரணத்தின் பின்னணி என்ன ?

இதனால் சந்தேகமடைந்த அவரது தோழிகள், அறையின் ஜன்னல் வழியே பார்த்துள்ளனர். அப்போது அலறி அடித்து நிர்வாகத்திடம் கூறவே, அவர்கள் உடனே வந்து கதவை உடைத்து ஷ்ரத்தாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து மருத்துவர்கள் இதுகுறித்து கேட்கையில், விடுதி அறையில் மயக்க நிலையில் இருந்ததாக கூறியுள்ளனர்.

மயக்கமடைந்து கிடந்ததாக பொய் கூறிய கல்லூரி.. கொந்தளித்த மாணவர்கள்.. கேரள மாணவி மரணத்தின் பின்னணி என்ன ?

இதையடுத்து மாணவி ஷ்ரத்தாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய பெற்றோர் - உறவினர் விசாரிக்க கோரிக்கை வைத்தனர். இதையடுத்தே மாணவியின் தோழிகள் அவரது மரணம் தற்கொலை என்று கூறினர்.

மயக்கமடைந்து கிடந்ததாக பொய் கூறிய கல்லூரி.. கொந்தளித்த மாணவர்கள்.. கேரள மாணவி மரணத்தின் பின்னணி என்ன ?

மேலும் சம்பவம் நிகழும் முன் தான், வகுப்பில் ஷ்ரத்தாவின் மொபைல் போனை ஆசிரியர் ஒருவர் வாங்கி கொண்டு கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் அவரது மதிப்பெண் குறைவாக பெற்றதால் ஆசிரியர்கள் திட்டி வந்ததாகவும், வகுப்பில் ஷ்ரத்தாவை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் ஷ்ரத்தா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் தோழிகள் கூறினர்.

மயக்கமடைந்து கிடந்ததாக பொய் கூறிய கல்லூரி.. கொந்தளித்த மாணவர்கள்.. கேரள மாணவி மரணத்தின் பின்னணி என்ன ?

இதைத்தொடர்ந்து பெற்றோர் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்புகள் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஷ்ரத்தாவின் தற்கொலையை கல்லூரி நிர்வாகம் மறைக்க முயற்சித்தாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மயக்கமடைந்து கிடந்ததாக பொய் கூறிய கல்லூரி.. கொந்தளித்த மாணவர்கள்.. கேரள மாணவி மரணத்தின் பின்னணி என்ன ?

இதைத்தொடர்ந்து கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories