இந்தியா

”சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றம் அல்ல”.. கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!

கொலை வழக்கு ஒன்றில் சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றம் அல்ல என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றம் அல்ல”..  கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ். வாலிபரான இவர் கடந்த 2015ம் ஆண்டு இளம் பெண் ஒருவரைக் கொலை செய்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் சடலத்துடன் அவர் உடலுறவு கொண்டுள்ளார்.

இதையடுத்து போலிஸார் ரங்கராஜை கைது செய்தனர். இந்த வழக்கு துமகூரு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், உடல் உறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டையும் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

”சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றம் அல்ல”..  கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!

இந்த தீர்ப்பை எதிர்த்து ரங்கராஜ் கர்நாடக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வீரப்பா, வெங்கடேஷ் நாயக் அடங்கிய அமர்வுக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளி ரங்கராஜ்க்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை செல்லும் என உத்தரவிட்டனர்.

”சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றம் அல்ல”..  கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!

ஆனால் சடலத்துடன் உடலுறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை உத்தரவு ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும் இறந்த ஒருவரின் உடலுடன் உடலுறவு கொள்வது குற்றம் ஆகாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீதிபதிகளின் இந்த கருத்துக்குப் பெண்கள் அமைப்புகள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories