ஹரியானா மாநிலம், குருகிராமில் இளம்பெண் ஒருவர் ஒருவருக்கு நண்பர் மூலம் ஒரு இளைஞர் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் ஒரு ஹோட்டல் அறையில் சந்தித்துக்கொண்ட நிலையில், இருவருக்கும் அறிமுகமான அந்த நபர் சிறிது நேரத்தில் அந்த அறையில் இருந்து வெளியேறியுள்ளார்.
அதன்பின்னர் அந்த இளைஞரும் இளம்பெண்ணும் சிறிது நேரம் அந்த அறையில் தனிமையில் இருந்துளனர். அதன்பின் அந்த இளைஞர் ஹோட்டல் அறையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையில் இளம்பெண் புகார் அளித்துள்ளார். அதன்படி இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்மந்தப்பட்ட நபரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
காவல்துறை விசாரணையில் அந்த இளைஞர் தான் தவறு ஏதும் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார். இதனால் போலிஸார் இந்த விசாரணையை துரிதப்படுத்தினர். இதற்கு நடுவே அந்த பெண் தான் புகார் அளித்த அந்த இளைஞரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அதில், அந்த இளைஞர் மேல் அளித்துள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றால் 20 லட்ச ரூபாயை கொடுக்க வேண்டும் என்று அந்த பெண் கூறியுள்ளார். உடனே இந்த தகவலை அந்த இளைஞர் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து போலிஸார் அந்த பெண்ணிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்திய நிலையில், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பதும், அந்த இளைஞரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடே அந்த பெண் இந்த செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதன் பின்னர் போலிஸார் அந்த பெண் மேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.