இந்தியா

பா.ஜ.கவையே கடுப்பேற்றிய ஒன்றிய அமைச்சர்.. கிரின் ரிஜிஜு விடமிருந்து சட்டத்துறையை பறித்த மோடி அரசு!

ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரின் ரிஜிஜு புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பா.ஜ.கவையே கடுப்பேற்றிய ஒன்றிய அமைச்சர்.. கிரின் ரிஜிஜு விடமிருந்து சட்டத்துறையை பறித்த மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் கிரின் ரிஜிஜு. இவர் தற்போது திடீரென புவி அறிவியல் துறைக்கு அமைச்சராக ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. அதேபோல் சட்டத்துறை அமைச்சராக ஜிதேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றிய அமைச்சரவையில் இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம் கிரண் ரிஜிஜு தொடர்ந்து கொலீஜியம் முறையி விமர்சித்துப் பேசி வந்ததால் கடுப்பான மோடி அரசு அவரை வேறு துறைக்கு மாற்றியுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக ஒன்றிய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திலிருந்து சட்டத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு நியமிக்கப்பட்டார். அப்போதிலிருந்தே நீதிமன்றங்களுக்கான கொலீஜியம் நியமனங்களை விமர்சித்து வருகிறார்.

பா.ஜ.கவையே கடுப்பேற்றிய ஒன்றிய அமைச்சர்.. கிரின் ரிஜிஜு விடமிருந்து சட்டத்துறையை பறித்த மோடி அரசு!

குறிப்பாக, உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் தொடர்பான சர்ச்சை கொலீஜியம் முறை அமலில் இருக்கும் வரை தொடரும் என்றும் நீதிபதிகள் தங்களுக்குத் தெரிந்தவர்களின் பெயர்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும் சூழ்நிலையை கொலீஜியம் உருவாக்கியுள்ளது என்று விமர்சித்துள்ளார்.

மேலும் கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டதால், நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்ற பெயரில் அரசாங்கம் கையெழுத்திட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அரசாங்கத்தின் பங்கு என்ன? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

பா.ஜ.கவையே கடுப்பேற்றிய ஒன்றிய அமைச்சர்.. கிரின் ரிஜிஜு விடமிருந்து சட்டத்துறையை பறித்த மோடி அரசு!

இப்படி தொடர்ச்சியாகப் பேசி வந்தது பா.ஜ.க அரசுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தி வந்துள்ளது. மேலும் இவரைத் தவிர வேறு பா.ஜ.கவினர் யாரும் கொலீஜியத்தை விமர்சித்துப் பேசவில்லை. இந்நிலையில் தான் ஒன்றிய சட்டத்துறையைப் பறித்து புவி அறிவியல் துறைக்கு கிரண் ரிஜிஜுக்கை மோடி அரசு மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories