இந்தியா

3 வயதில் ஆசிட் வீச்சால் சிதைந்த முகம்..15 வயதில் CBSE 10 வகுப்பு தேர்வில் முதலிடம்: தன்னம்பிக்கை சிறுமி!

3 வயதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட சிறுமி 10ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து அனைவருக்கும் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக உருவெடுத்துள்ளார்.

3 வயதில் ஆசிட் வீச்சால் சிதைந்த முகம்..15 வயதில் CBSE 10 வகுப்பு தேர்வில் முதலிடம்: தன்னம்பிக்கை சிறுமி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வாழ்க்கையில் தோல்வி அடைந்தாலோ அல்லது பாதிப்பு ஏற்பட்டாலோ வாழ்க்கை முடிந்து விட்டது என பலரும் அப்படியே வீட்டில் முடங்கி விடுகின்றனர். இந்நிலையில் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக சண்டிகரைச் சேர்ந்த 10ம் வகுப்பு சிறுமி உருவெடுத்துள்ளார்.

சண்டிகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி கஃபி. இவர் 3 வயது இருக்கும் போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த மூன்று பேரால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியுள்ளார். இதில் அவரது முகம் முழுவதும் சிதைந்துள்ளது. பல மாதம் சிகிச்சைக்கு பிறகு மீண்டுள்ளார். இருப்பினும் அவரது அழகிய முகம் சிதைந்துவிட்டது.

இதனால் துவண்டு அப்படியே வீட்டில் முடங்கி விடாமல் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். பல கேலி கிண்டல்களுக்கு ஆளானாலும் படிப்பைக் கைவிடவில்லை கஃபி.

3 வயதில் ஆசிட் வீச்சால் சிதைந்த முகம்..15 வயதில் CBSE 10 வகுப்பு தேர்வில் முதலிடம்: தன்னம்பிக்கை சிறுமி!
3 வயதில் ஆசிட் வீச்சால் சிதைந்த முகம்..15 வயதில் CBSE 10 வகுப்பு தேர்வில் முதலிடம்: தன்னம்பிக்கை சிறுமி!

8 வயதில் ஹிசார் பார்வையற்றோர் பள்ளியில் படிக்க தொடங்கினார் கஃபி. பின்னர் சண்டிகருக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது. சவால்கள் மற்றும் வளங்களின் பற்றாக்குறை இருந்தபோதிலும், காஃபியின் படிப்பின் மீதான ஆர்வம் ஒருபோதும் குறையவில்லை.

அவர் எப்போதும் கல்வியில் சிறந்து விளங்கினார் மற்றும் சண்டிகரில் உள்ள பார்வையற்றோர் நிறுவனத்தில் பிரிவு 26 இல் 6 ஆம் வகுப்புக்கு நேரடியாக அனுமதி பெற்றார். இவரின் இந்த நம்பிக்கை தான் தற்போது சிறுமி காபியை 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 95% மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடத்தை பிடிக்க வைத்துள்ளது. இதன் மூலம் சிறுமி அனைவருக்கும் நம்பிக்கையின் எடுத்துக் காட்டாக உருவெடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories