இந்தியா

உயிர் பலி வாங்கும் NEET.. மதிப்பெண்ணுக்கு பயந்து புதுவை மாணவன் விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பம் !

புதுச்சேரியில் நீட் தேர்வு எழுதியிருந்த மாணவர் ஒருவர் மதிப்பெண்ணுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிர் பலி வாங்கும் NEET.. மதிப்பெண்ணுக்கு பயந்து புதுவை மாணவன் விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்ததை அடுத்து, மாணவர்கள் அதற்காக கோச்சிங் சென்று தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் கோச்சிங் செல்ல பண வசதி இல்லாத ஏழை மாணவர்கள் இந்த தேர்வால், தங்கள் மருத்துவ கனவுகளை இழந்து வருகின்றனர்.

உயிர் பலி வாங்கும் NEET.. மதிப்பெண்ணுக்கு பயந்து புதுவை மாணவன் விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பம் !

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக அரசு பல விஷயங்களை செய்து வருகிறது. இந்த சூழலில் மாணவர்கள் தங்கள் மருத்துவ கனவு நிறைவேறாது என்ற முடிவினால் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றும் வகையில், நீட் தேர்வுக்காக பயிற்சி பெற அரசும் தனியாக கோச்சிங் சென்டர் உருவாக்கியுள்ளது. எனவே மாணவர்கள் அதில் பயின்று வருகின்றனர்.

உயிர் பலி வாங்கும் NEET.. மதிப்பெண்ணுக்கு பயந்து புதுவை மாணவன் விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பம் !

இந்த நிலையில், இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர் இந்த நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். புதுச்சேரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் ஹேமச்சந்திரன் (18). கடந்த ஆண்டு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதன் காரணமாக, இந்த ஆண்டும் இன்று நடைபெறவுள்ள நீட் தேர்வை எழுத இருந்ததார்.

உயிர் பலி வாங்கும் NEET.. மதிப்பெண்ணுக்கு பயந்து புதுவை மாணவன் விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பம் !

அதற்காக தீவிர பயிற்சி பெற்று வந்த நிலையில், எங்கே இந்த முறையும் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பெற்றோர் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்தவர்கள், மாணவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிர் பலி வாங்கும் NEET.. மதிப்பெண்ணுக்கு பயந்து புதுவை மாணவன் விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பம் !

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

banner

Related Stories

Related Stories