இந்தியா

”கட்டி அணைத்து பாலியல் தொல்லை”: பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!

பிரிஜ் பூஷன் 2016ம் ஆண்டு முதல் தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாக மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி போலிஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”கட்டி அணைத்து பாலியல் தொல்லை”:  பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாகப் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

”கட்டி அணைத்து பாலியல் தொல்லை”:  பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!

இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.

பின்னர் விசாரணைக் குழு அமைத்தும் 3 மாதங்கள் ஆகியும் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் போராட்டத்திற்குக் காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் இவர்கள் போராட்டத்தை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது. நேற்று போராட்டத்தின் போது வேண்டும் என்றே டெல்லி போலிஸார் அங்கிருந்த வீரர்களை அப்புறப்படுத்த முற்சித்தனர். இதில் வீரர்கள் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. போலிஸாரின் இந்த அராஜக நடவடிக்கைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

”கட்டி அணைத்து பாலியல் தொல்லை”:  பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!

இதற்கிடையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் கடந்த வாரம் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது புகார் கொடுத்த 7 வீராங்கனைகளிடம் போலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதில், ”2016, 2018ம் ஆண்டு போட்டிகளின் போது பிரிஜ் பூஷன் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்" என வீராங்கனைகள் கூறியுள்ளனர்.

மேலும்,"மூச்சுப் பயிற்சியைச் சோதிப்பதாகக் கூறி உடலின் பல இடங்களில் அத்துமீறித் தொடுவது, தவறான நோக்கில் கட்டி அணைப்பது போன்ற தகாத முறையில் தொடர்ந்து நடந்து கொண்டார். அதோடு மல்யுத்த கூட்டமைப்பு அலுவலகத்திலும், பிரிஜ்பூஷன் வசிக்கும் டெல்லி அசோகா சாலையில் உள்ள பங்களா வீட்டிலும் தங்களிடம் மிகமோசமாக நடந்து கொண்டார்" என தெரிவித்துள்ளனர். வீராங்கனைகளின் இந்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories