இந்தியா

”பிரதமர் மோடி விஷ பாம்பு”.. மல்லிகார்ஜூன கார்கே பேச்சுக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு!

பிரதமர் மோடி ஒரு விஷப் பாம்பு போன்றவர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”பிரதமர் மோடி விஷ பாம்பு”.. மல்லிகார்ஜூன கார்கே பேச்சுக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்த தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். இது பா.ஜ.கவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக உள்ளதால் மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர் என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கலபுரகியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கலந்து கொண்டு பேசியபோது, "பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர். அது நஞ்சா? அல்லது இல்லையா? என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம். அதைத் தொட்டால் மரணமடைந்து விடுவீர்கள் என கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சுக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் மூத்த அரசியல் தலைவர் நமது நாட்டின் பிரதமரை இப்படியாகக் கொச்சைப்படுத்துவது என்றும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.கவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

”பிரதமர் மோடி விஷ பாம்பு”.. மல்லிகார்ஜூன கார்கே பேச்சுக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு!

இதையடுத்து தான் பிரதமர் மோடியைப் பாம்பு என்று குறிப்பிடவில்லை. நான் சொன்னது பா.ஜ.கவின் சித்தாந்தம் பாம்பு போன்றது. அதைத் தொட்டால் உங்களுக்கு மரணம் நிச்சயம் என்று கூறினேன். நான் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியைக் கூறவில்லை என மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories