அரியானா மாநிலத்தில் உள்ள பிஜ்னா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கரண் சர்மா. 30 வயது இளைஞரான இவர், அந்த பகுதியில் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்த சூழலில் சம்பவத்தன்று இவர் வழக்கம்போல் அவரது வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் தெருவில் சுற்றி திரிந்து கொண்டிருந்த பிட்புல் நாய் ஒன்று அவர் மீது திடீரென பாய்ந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சியில் இருந்த அந்த நபர், உடனே அந்த நாயை தள்ளி விட்டு ஓடியுள்ளார். மேலும் அருகில் இருந்து கம்பு குச்சியை கொண்டு துரத்த முயன்றுள்ளார். ஆனால் அதையும் மீறி, அந்த நாய், கரணின் அந்தரங்க உறுப்பை வெறித்தனமாக கண்டித்துள்ளது.
இதனால் கரண் அலறி கத்தி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் உடனே வந்து நாயை விரட்டினர். இதைத்தொடர்ந்து கீழே இரத்த வெள்ளத்தில் கிடந்த கரணை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கரணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே முன்னதாக ஏற்கனவே ஒரு நபரை இந்த நாய் கடித்து கடுமையாக தாக்கிய நிலையில், தற்போது மீண்டும் ஒரு நபரை கொடூரமாக தாக்கியுள்ளது. அந்த நாய் மீது தீராத கோபத்தில் இருந்த அந்த பகுதி மக்கள் அதனை கற்காளாலும், காம்புகளிலும் அடித்தே கொன்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெருவில் சுற்றி திரிந்த பிட்புல் நாய், இளைஞரின் அந்தரங்க உறுப்பை கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிட்புல் நாய் - நாய் வகைகளிலே மிகவும் ஆபத்தான விலங்காகும். முன் காலத்தில் பிட்புல் நாயை வேட்டையாட பயன்படுத்த பட்டதால், இதன் குணம் மிகவும் கொடூரமாக இருக்கும். எனவே இந்த வகை நாயை இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகளில் வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் பிட்புல் நாய் வளர்க்க தடையில்லை என்பதால் பல்வேறு மாநிலங்களில் இந்த நாய்களை வீட்டில் வளர்த்து வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் மகன் வளர்த்த பிட்புல் நாய், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வயதான தாயை கடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த நாயை மகன் லக்னோ மாநகராட்சியில் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து அதே மாதத்தில் பஞ்சாபில் பிட்புல் ரக நாய் ஒன்று சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவனின் காதலி கடித்து துப்பியுள்ளது. இதுவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் மீண்டும் அதே உபியில், பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை உரிமையாளர் வைத்திருந்த பிட்புல் நாய் ஒன்று கொடூரமாக கடித்ததில் சிறுவனுக்குக் 150 தையல்கள் போடபட்டுள்ளது. அதோடு கான்பூரில் பசுவின் தாடையை பிட்புல் நாய் ஒன்று கடித்துள்ளது. அரியானாவிலும் வீட்டில் வளர்த்த பிட்புல் நாய், உரிமையாளரின் மனைவியை கடித்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் உபி, கான்பூரில் இந்த வகை நாயை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தெருவில் சுற்றி திரிந்த பிட்புல் நாய், இளைஞரை கடித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை அடித்தே கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.