இந்தியா

’நீ கம்முனு கட’.. புல்வாமா தாக்குதல் குறித்து பேசக்கூடாது - பிரதமர் மோடி மிரட்டல்: சத்யபால் மாலிக் பகீர்!

புல்வாமா தாக்குதல் குறித்து எதுவும் பேசக்கூடாது என பிரதமர் மோடி தன்னிடம் சொன்னதாக முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’நீ கம்முனு கட’.. புல்வாமா தாக்குதல் குறித்து பேசக்கூடாது - பிரதமர் மோடி மிரட்டல்: சத்யபால் மாலிக் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதல் குறித்து யாராலும் மறக்க முடியாது. தீவிரவாதி ஒருவன் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த பேருந்து மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 44 சி.ஆர்.பி.எஃப் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாட்டையே அதிரவைத்தது.

இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து அப்போதே ஒன்றிய அரசுக்குப் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் ஒன்றிய அரசு அனைத்து கேள்விகளையும் மவுனமாகவே கடந்து விட்டது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்து எதுவும், பேசக்கூடாது என பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக அப்போது ஜம்மு காஷ்மீருக்கு ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் தற்போது கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’நீ கம்முனு கட’.. புல்வாமா தாக்குதல் குறித்து பேசக்கூடாது - பிரதமர் மோடி மிரட்டல்: சத்யபால் மாலிக் பகீர்!

தி வயர் இதழுக்காகக் கரண் தாப்பர் நடத்திய பேட்டி ஒன்றில்தான் சத்யபால் மாலிக் பிரதமர் மோடி மீது இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும் கூறும் அவர், "2019ம் ஆண்டு நடந்த புல்வாமா தீவிரவாத தாக்குதல் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் மிகப்பெரிய தோல்வி.

இந்த சம்பவம் நடந்தபோது உள்துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் இருந்தார். அப்போது சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் செல்வதற்கு விமானம் கேட்டபோது உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. அவர்கள் சாலை மார்க்கமாகச் செல்ல ஆணையிடப்பட்டது.

ஆனால் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் செல்லும் பாதையின் பாதுகாப்பு திறம்படச் செய்யவில்லை. பின்னர் புல்வாமா தாக்குதல் நடந்த பிறகு பிரதமர் மோடி தன்னுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து அதிகம் பேசவேண்டாம் என அறிவுறுத்தினார்.

மேலும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இதே கருத்தைத்தான் தன்னிடம் கூறினார். இந்த சம்பவத்தில் பாக்கிஸ்தான் மீது பழியைச் சுமத்தி அரசாங்கத்திற்கும், பா.ஜ.கவிற்கும் தேர்தல் ஆதாயத்தைப் பெறுவதே நோக்கம் என்பதை நான் பின்னர் உணர்ந்தேன்.

புல்வாமா தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட RDX வெடிமருந்து பாகிஸ்தானிலிருந்து கார் மூலம் கொண்டு வரப்பட்டு 10 - 15 நாட்கள் காஷ்மீருக்கள் சுற்றித்திருந்தது உள்துறைக்குத் தெரியாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. இது மிகப்பெரிய தோல்வி.

ஆர்.எஸ்.எஸ் முக்கிய புள்ளியான ராம் மாதவ் அனல் மின் நிலையம் அமைப்பதற்கும், ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் தொடர்பாக உத்தரவை வழங்க தன்னிடம் ரூ.300 கோடி பேரம் பேசினார். இது குறித்து பிரதமர் அலுவலகத்திற்குத் தெரிவித்தபோது அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலைப் பயன்படுத்தித் தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க சதித்திட்டம் செய்கிறது என எதிர்க்கட்சிகள் அப்போதே கூறிய நிலையில் தற்போது இதே கருத்தை ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories