இந்தியா

”திருடர்கள்.. திருடர்கள்”.. ஷிண்டே அரசை விமர்சித்து பாட்டு பாடிய 2 ராப் பாடகர்கள் மீது வழக்குப் பதிவு!

ஏக்நாத் ஷிண்டே அரசை விமர்சித்து பாட்டுப் பாட்டிய இரண்டு ராப் பாடகர் மீது மகாராஷ்டிர போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

”திருடர்கள்.. திருடர்கள்”..  ஷிண்டே அரசை விமர்சித்து பாட்டு பாடிய 2 ராப் பாடகர்கள் மீது வழக்குப் பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ் முங்கோஸ். ராப் பாடகரான இவர் பாடல்களைப் பாடி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அண்மையில் ஏக்நாத் ஷிண்டே அரசை மறைமுகமாக விமர்ச்து பாடல் பாடி இதைய யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

இதில், திருடர்கள் என்றும் ரூ.50 கோடியுடன் வந்திருக்கிறார்கள் என உத்தவ் தாக்ரே அரசை கவிழ்த்து பா.ஜ.கவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்ததை மறைமுகமாக கிண்டல் அடித்து பாடியுள்ளார்.

”திருடர்கள்.. திருடர்கள்”..  ஷிண்டே அரசை விமர்சித்து பாட்டு பாடிய 2 ராப் பாடகர்கள் மீது வழக்குப் பதிவு!

இந்த வீடியோவை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த வீடியோ பார்த்து கடுப்பான குறித்து ஹிண்டே ஆதரவாளர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் ராஜ் முங்கோஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் மற்றொரு ராப் பாடர் உமேஷ் காடேவும், ஹிண்டே அரசை விமர்சித்து மக்கள் படும் துன்பங்களைக் கேலி செய்து பாடி தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் இவர் மீதும் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அடுத்தடுத்து இரண்டு ராப் பாட்டர்கள் மீது மகாராஷ்டிர போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது கலைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கருத்துச் சுதந்திரத்தைப் பரிக்கும் நடவடிக்கையில் ஹிண்டே அரசு ஈடுபட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories