கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா பகுதியில் உள்ள குட்டிகர் என்ற கிராமம் உள்ளது. இங்கு சிவராம் (32) என்ற இளைஞர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது. எனவே மனைவி, மக்கள், தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
வெளியில் வேலை செய்து வரும் சிவராமுக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. எனவே அடிக்கடி வீட்டுக்கு குடித்து விட்டு வருவார். இதனால் இவருக்கும், அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்று இருவருக்கும் சிக்கனுக்காக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தந்தை மகனை கொலை செய்துள்ளார்.
அதாவது சம்பவத்தன்று சிவராம் வீட்டில் சிக்கன் சமைக்கப்பட்டிருந்தது. இதனால் தந்தை மற்றும் பிள்ளைகள் சிக்கனை சாப்பிட்டுள்ளனர். நீண்ட நேரம் கழித்து வீடு திரும்பிய கனவை சிவராம், மனைவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது சிக்கன் குழம்பையும் கொடுத்துள்ளார். ஆனால் அதில் சிக்கன் மிகவும் குறைவாக இருந்துள்ளது. இதனால் தகராறு செய்துள்ளார்.
அந்த தகராறின் போது அவர் போதையில் இருந்துள்ளார். இந்த தகராறின்போது தந்தையும் வந்துள்ளார். அப்போது இவருக்கும் தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவராம் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அருகிலிருந்த பொருட்களை எடுத்து தாக்க முற்பட்டதாக தெரிகிறது. இதனால் மேலும் கோபமடைந்த தந்தை மகனை மரக்கட்டையால் தாக்கியுள்ளார்.
அப்போது மயக்கமடைந்த மகன் மூர்ச்சையாகி உள்ளார். தொடர்ந்து அவரை சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சிவராமின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த தந்தையையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.