இந்தியா

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ.. உ.பியில் பதுங்கியிருந்த நபரை தட்டி தூக்கிய கேரள போலிஸ்: பிடித்தது எப்படி?

கேரளா இரயிலில் நேற்றைய முன்தினம் இரவு நேரத்தில் பெட்ரோல் வைத்து தீ வைத்த மர்ம நபரை கேரள போலிசார் உத்தர பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ.. உ.பியில் பதுங்கியிருந்த நபரை தட்டி தூக்கிய கேரள போலிஸ்: பிடித்தது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரளா மாநிலம் ஆலப்புழா - கண்ணூர் விரைவு இரயில் வழக்கம்போல் நேற்றைய முந்தினம் இயங்கியது. அப்போது அந்த இரயில் கோழிக்கோடு, எலத்தூர் இரயில் நிலையம் அருகே நேற்று இரவு சென்றுக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இரவு சுமார் 9.30 மணி அளவில் D1 கோச்சில் பயணம் மர்ம நபர் ஒருவர் தனது சக பயணிகள் மீது தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ.. உ.பியில் பதுங்கியிருந்த நபரை தட்டி தூக்கிய கேரள போலிஸ்: பிடித்தது எப்படி?

இதனால் பதறிப்போன பயணிகள் அலறியடிக்க, இதில் 2 வயது குழந்தை, பெண், ஆண் என மூன்று பேர் ஓடும் இரயிலில் இருந்து குதித்துள்ளனர். அதோடு இரயிலினுள் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட அதில் ஒரு பயணி அபாய சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்தினார். அந்த நேரத்தில் அந்த மர்ம நபர் அங்கிருந்து தலைதெறிக்க தப்பியோடினார்.

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ.. உ.பியில் பதுங்கியிருந்த நபரை தட்டி தூக்கிய கேரள போலிஸ்: பிடித்தது எப்படி?

இதையடுத்து இதுகுறித்து இரயில்வே போலிஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்து விசாரித்தனர். அதோடு ஓடும் இரயிலில் இருந்து குதித்த 3 பேரையும் தேடினர். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் இரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் பெயர் சஹாரா (2), ரஹ்மத், சௌபிக் என்று தெரிய வந்தது.

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ.. உ.பியில் பதுங்கியிருந்த நபரை தட்டி தூக்கிய கேரள போலிஸ்: பிடித்தது எப்படி?

மேலும் இந்த கொடூர தாக்குதலில் 8 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்களையும் மீட்ட அதிகாரிகள் கோழிக்கோடு அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ.. உ.பியில் பதுங்கியிருந்த நபரை தட்டி தூக்கிய கேரள போலிஸ்: பிடித்தது எப்படி?

அப்போது தீ வைத்த நபர் தப்பி செல்லும் CCTV காட்சிகள் போலிசாரால் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அந்த மர்ம நபர் குறித்து ஸ்கெட்ச் வரைபடத்தையும் அதிகாரிகள் வெளியிட்டனர். இதையடுத்து இதுகுறித்து போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதாவது அந்த நபர் பெயர் ஷாருக் சைபி என்று தெரியவந்தது.

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ.. உ.பியில் பதுங்கியிருந்த நபரை தட்டி தூக்கிய கேரள போலிஸ்: பிடித்தது எப்படி?

இதையடுத்து தொடர்ந்து கேரள புலனாய்வு விசாரணைக்குழு அதிகாரிகள் விசாரித்து வந்தனர். அதோடு இவர் குறித்த வரைபடத்தையும் சக மாநில காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சூழலில் ஷாருக் சைபியை உத்தரப்பிரசத்தில் அம்மாநில அதிகாரிகள் கைது செய்தனர்.

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ.. உ.பியில் பதுங்கியிருந்த நபரை தட்டி தூக்கிய கேரள போலிஸ்: பிடித்தது எப்படி?

உத்தர பிரதேசத்தில் உள்ள புலந்த்சாகர் என்ற மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஷாருக் சைபியை அம்மாநில தீவிரவாத எதிர்ப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனிடையே கேரள புலனாய்வு விசாரணைக்குழு இது தொடர்பாக விசாரிக்க டெல்லி - உ.பி நடுவில் இருக்கும் நொய்டாவுக்கு விரைந்தது. அப்போது உபி அதிகாரிகள் ஷாருக் சைபியை கைது செய்து கேரள போலிஸுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ஷாருக் சைபியை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories