மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் ஆங்கில வழிப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தவறான விஷயங்கள் நடப்பதாக பலமுறை புகார்கள் வந்தது. இதன் காரணமாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் அப்பள்ளியில் நேற்று திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் பள்ளியில் உள்ளே சென்றதும் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளியில் படுக்கைகளோடு தனித்தனி அறைகள் இருந்துள்ளார். மேலும், மதுபானம்,முட்டைகள் அடுக்கும் தட்டுகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றையும் அந்த குழு பள்ளியில் இருந்ததை கண்டறிந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அங்கு மேலும் ஆய்வு செய்த அதிகாரிகள் பள்ளி அறைகள் சில தங்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. அதோடு அங்கு தங்கியிருந்த சிலர் குழுவினரால் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கூறிய மாவட்ட ஆட்சியர் நிவேதிதா சர்மா " பள்ளியின் முதல்வர் இந்த பள்ளியை தங்கும் இடமாக மாற்றியுள்ளார் என்றும், பெண் மாணவிகளும் இங்கு படிக்கும் நிலையில், அங்கிருந்து ஆணுறைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
அதோடு இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் முதல்வர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.